மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மாப்பிள்ளை: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமகன் செய்த காரியத்தை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2022, 11:41 AM IST
  • மாலை மாற்றும் சடங்கில் நடந்த வேடிக்கை.
  • மாலை மாறி வேறு கழுத்தில் விழுந்தது.
  • கலாட்டா திருமணத்தின் வீடியோ வைரல்.
மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மாப்பிள்ளை: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது. இவற்றில் சில சம்பவங்கள் மணமக்கள் மற்றும் விருந்தினர்களின் மனதில் அப்படியே நின்றுவிடுவதுண்டு. இவற்றை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து சிரிப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் நடப்பதை பார்த்து மணமகள் மட்டுமின்றி அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். 

இந்த வீடியோவில், மணமகன், மாலை மாற்றும் சடங்கின்போது, மணமகளுக்கு பதிலாக அவரது தங்கைக்கு மாலை அணிவித்து விடுகிறார். 

மேலும் படிக்க | மணமகனுக்கு வந்த சோதனை, மேடையில் அவிழ்ந்துவிழுந்த பேண்ட்: வைரல் வீடியோ 

மணமகளை சீண்டிப்பார்த்த மணமகன் 
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணம் ஒன்று நடப்பதை காண முடிகின்றது. மாலை மாற்றும் சடங்குக்கு மணமகனும் மணமகளும் தயராக உள்ளனர். அருகில் மணமக்களின் அனைத்து உறவினர்களும் இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

முதலில் மணமகள் தனது மணமகனுக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் மணமகனின் முறை வருகிறது. மணமகன் தனது மணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது ஒரு விளையாட்டை விளையாடுகிறார். மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, அவரது தங்கைக்கு மாலை அணிவித்து விடுகிறார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார். 

மணமகன் செய்த கலாட்டா வீடியோவை இங்கே காணலாம்: 

அதிர்ச்சியடைந்த மணமகள் 
மாலை மாற்றும் சடங்கின்போது மணமகன் நடந்து கொண்ட விதத்தை பார்த்து மணமகள் முற்றிலும் அதிர்ச்சி அடைந்தார். திருமணம் தொடர்பான இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த வீடியோ Prince_verma569 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. செய்தி எழுதும் நேரம் வரை, வீடியோவுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை எள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஸ்கூட்டியில் மாஸ் காட்டும் மணப்பெண்: மயங்கிப்போன நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News