சீனாவை சேர்ந்த இளம்பெண், தன்னை ஐஸ்கிரீம் வாங்க காதலன் அனுமதிக்காததால் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவை சேர்ந்த இளம் காதல் ஜோடி, ஜூமாடியன் பகுதியின் ஹெனான் நகரத்தில் நடந்து சென்றுக்கொண்டு இருந்த போது காதலி ஐஸ்கிரீம் வாங்கி உண்ண முற்பட்டுள்ளார். அப்போது அவரை இடை நிறுத்திய காதலன், ஏற்கனவே அவர் பருமனான உடல் எடை கொண்டிருப்பதாகவும், மேலும் ஐஸ்கிரீம் வாங்க வேண்டாம் எனவும் மறுத்துள்ளார்.


இதனால் ஆத்திரம் கொண்ட காதலி அருகில் இருந்த கத்தியை எடுத்து காதலனை சரமாறியாக தாக்கியுள்ளார். பின்னர் சம்பவயிடத்தில் இருந்தவர்கள் காதனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் அவர் வழியிலேயே உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


உள்ளூர் ஊடக செய்திகளின் படி இளம் ஜோடிகளின் வயது 20 வயதிற்கும் குறைவானது எனவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இவர்களது காதல் பிறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


காவல்துறை அறிக்கையின் படி இளம்பெண், தன் காதலனை மூன்று அல்லது நான்கு முறை கத்தியால் குத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. காதலனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற அவரை காவல்துறையினர் விரட்டி பிடித்துள்ளனர்.


இவ்வாறான சம்பவங்கள் சீனாவில் நிகழ்வது இது முதல் முறை அல்ல, சமீபத்தில் காதலர் தினத்திற்கு பரிசாக தனக்கு ஸ்மார் போன் வாங்கி தராத காதலனை இளம்பெண் ஒருவர் பொது இடத்தில் வைத்து 52 முறை அறைந்த விவகாரம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.