கோவிட் -19 டெல்டா ரக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தன் நாட்டு மக்களை இரும்பு கம்பிகளுக்கு பின்னால் அடைத்து கொடுமை செய்கிறது சீனா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 இன் டெல்டா ரக வைரஸ் பரவுவதால், சீன குடிமக்களை அவர்களின் வீடுகளுக்குள்ளே அதிகாரிகள் சிறை வைப்பதை காட்டும்  வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.


வெய்போ, ட்விட்டர் மற்றும் யூடியூப் (Weibo, Twitter, and YouTube) பல வீடியோக்கள் வெளிவந்தன, ஹஸ்மத் தொழிலாளர்கள் வெளியேறுவதைத் தடுக்க இரும்பு கம்பிகளுக்கு பின்னால் அவர்கள் அடைக்கப்பட்டிருப்பதை வீடியோக்கள் காட்டுகின்றன.



இந்தத் தொழிலாளர்களில் யாராவது மூன்று முறைக்கு மேல் தங்கள் கதவைத் திறப்பது கண்டறியப்பட்டால், அதிகாரிகள் அவர்களை உள்ளே வைத்து பூட்டிவிடுவார்கள் என்று தைவான் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிபிஇ பாதுகாப்பு கவசம் அணிந்தவர்கள் ஒரு வீட்டில் எக்ஸ் வடிவத்தில் பெரிய உலோகக் கம்பிகளை ஒரு வாசலின் மேல் வைத்திருப்பது ட்விட்டர் புகைப்படம் ஒன்றில் காட்டப்பட்டுள்ளது.  


ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று சீனாவில் 143 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாள், அதாவது ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று 125 ஆக இருந்தது.



அதிகாரிகளின் கூற்றுப்படி, கொரோனாவின் டெல்டா திரிபு சீனாவில் அண்மையில் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.  


108 புதிய வைரஸ் பாதிப்புகளை அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் பதிவு செய்துள்ளது. இது, ஜனவரி 20 க்குப் பிறகு மிகப்பெரிய எண்ணிக்கையாகும். அதற்கு முந்தைய நாள் 94 ஆக இருந்த தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


பெரும்பாலான கொரோனா நோய்த்தொற்று தற்போது சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மற்றும் மத்திய மாகாணமான ஹெனானில் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரஸை முற்றிலும் ஒழித்துக் கட்ட சீனா முயற்சிகள் எடுத்திருக்கும் சமயத்தில், கொரோனா டெல்டா திரிபு அந்நாட்டிற்கு மிகப்பெரிய தலைவலியாய் மாறியிருக்கிறது.



ஜூலை 10ம் தேதியன்று சீனாவின் நாஞ்சிங் நகரில் ஏர் சீனா சிஏ 910 விமானம் தரை இறங்கிய போது, மாஸ்கோவிலிருந்து பயணம் செய்தவர்களில் ஒருவருக்கு கொரோனாவின் 'டெல்டா திரிபு வைரஸ் பாதித்திருந்தது.


ஆனால் அது தெரியாமல், பயணிகள் விமானத்தை விட்டு வெளியேறிய பிறகு, விமான நிலையத்தில் இருந்த துப்புரவுப் பணியாளர்கள் விமானத்தை சுத்தம் செய்தனர். அவர்கள் மூலம் கொரோனாவின் டெல்டா திரிபு வைரஸ் சீனாவில் பரவியிருக்கலாம் என்று சீன அதிகாரிகள் கருதுகின்றனர்.


கடந்த சில வாரங்களில், கொரோனா வைரஸின் டெல்டா திரிபு குறைந்தது 16 சீன மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.


Also Read | கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்க காசநோய் தடுப்பூசி பயனளிக்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR