புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் பல நாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள், நாடு, அணி என்ற வித்தியாசமின்றி அதிகபட்சமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்கள். இவர்களது பாணி, விளையாடும் ஸ்டைல், ரசிகர்களிடம் இணைப்பில் இருக்கும் முறை ஆகியவற்றின் காரணமாக சில வீரர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் மெற்கு இந்திய அணியின் மூத்த வீரர் கிரிஸ் கெயில்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் (Chris Gayle) தொடர்ந்து சமூக ஊடகங்களில் உற்சாகத்துடன் இருப்பவர். அவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு புதுப்பிப்புகளை அளிக்கத் தவறுவதில்லை. 


இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமானதால், IPL 2021 காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு IPL-லில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். 


கிறிஸ் கெயில் தலைப்பாகை அணிந்து காணப்பட்டார் 
கிறிஸ் கெயில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் தலைப்பாகை அணிந்திருப்பதைக் காண முடிகிறது. கிறிஸ் கெயில் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, 'நாளைய படப்பிடிப்புக்காக ஆர்வமாக உள்ளேன். ஒரு பஞ்சாபி அப்பாவாகப் போகிறேன்' என எழுதியுள்ளார்.



கிறிஸ் கெயிலின் இந்த தோற்றத்தை ரசிகர்கள் விரும்புகிறார்கள்


கிறிஸ் கெயிலின் இந்த தோற்றம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. கிறிஸ் கெயில் பகிர்ந்த இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். இதற்கு முன்னர் கிறிஸ் கெயில் ஒரு பொம்மை காரின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ: MS Dhoni-யின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்: அவர் இறந்தது எப்படி?


இந்த பதிவிற்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (David Warner) ரியாக்ட் செய்தார். வார்னர் தன் பாணியில், 'இது என்னுடைய டைப் பதிவு' என கெயிலின் பதிவுக்கு கமெண்ட் செய்தார். 


IPL-லின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 


கிறிஸ் கெயில் IPL-லில் இதுவரை அனைத்து பதிப்புகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இதுவரை கிறிஸ் கெயில் IPL-ல் மொத்தம் 140 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவற்றில் அவர் 40.50 என்ற சராசரி மற்றும் 149.45 என்ற ஸ்ட்ரைக் வீதத்துடன் 4950 ரன்களை எடுத்துள்ளார். கிறிஸ் கெயில் IPL-லில் 31 அரைசதங்களையும் 6 சதங்களையும் அடித்திருக்கிறார்.


ALSO READ: MS Dhoni-யின் புதிய லுக்கால் ஷாக் ஆன ரசிகர்கள்: சமூக ஊடகங்களில் லுக் வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR