மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்து வரும் அவரது எதிர்பாளர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலான ஒரு வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இந்தியாவில் நடைப்பெற்ற IPL போட்டியாளர்கள் தேர்வின் போது விலை போகமல் இருந்த வீரர் கிறிஸ் கெயில். பின்னர் பஞ்சாப் அணியில் வாய்ப்பு கிடைத்து தன் திறமையினை வெளிப்படுத்தினார். எனினும் அவரது எதிர்பாளர்கள் அவர் பார்ம் அவுட் ஆகிவிட்டார் என விமர்சனங்கள் வைத்து வந்தனர்.


இந்நிலையில் தற்போது கனடாவில் நடைப்பெற்று வரும் குளோபல் டி20 தொடரில் அவர் ஸ்பைடர் மேன் போல் பறந்து பந்தை பிடித்துள்ள வீடியோ அவரது எதிர்பாளர்கள் அனைவருக்கும் பதில் அளிக்கும் வகையில் உள்ளது.


பந்து வீச்சாளர் வீசிய பந்தினை எதிர்கொண்ட மட்டையாளர் கேவம் ஹோட்ஜின் மட்டையில் இருந்து நழுவிய பந்து, ஸ்லிப்பிங்கில் நின்றிருந்த கிறிஸ் கெயிலிடம் சென்றது. இந்த பந்தினை முதலில் தவறவிட்ட கெயல், அடுத்த நொடியே மற்றொரு கையால் தாவி பிடித்து மட்டையாளரை பெவிலியன் அனுப்பி வைத்தார்.


இந்த கேட்ச் ஆனது கிறிஸ் கெயிலின் விளையாட்டு திறமையினை மீண்டும் நிறுபித்துள்ளது. அந்த வீடியோ தற்போது உங்களுக்காக...