Thrilling Viral Video: ரிங் மாஸ்டரை பின்னி பெடலெடுக்கும் சிங்கம்: வீடியோ வைரல்
சர்க்கஸுக்குள் இருக்கும் சிங்கம், ரிங் மாஸ்டரை துரத்தி வேட்டையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது
காட்டு ராஜாவை கூண்டில் அடைத்து சர்கஸ் விலங்காக மாற்றினால் அது என்ன செய்யும்? இந்த கேள்வி பலருக்கும் எழுகிறது. அதற்கான விடையை சொல்லும் ஒரு வீடியோ சமூக ஊடகஙக்ளில் வைரலாகிறது.
காட்டின் அரசன் என்று பெயர் பெற்ற சிங்கத்தின் வேட்டை துல்லியமாகவும், கொடூரமாகவும் இருக்கும். எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், அதை அசால்டாக அடித்து துவம்சம் செய்யும் சிங்கத்தின் நடை பிரசித்திபெற்றது.
சிங்கத்தின் சீற்றத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் பசியில் இருக்கும் சிங்கம் கொடூரமாக தாக்குதல் நடத்தும்.
மேலும் படிக்க | போச்சா....: சீன் போட போய் சட்டை பறிபோன பரிதாபம், வைரல் வீடியோ
அப்படியான வீடியோ ஒன்றுதான் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. பொதுவாக இணைய உலகத்தில் பல வித வீடியோக்கள் வைரலாகிறன. சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் வீடியோக்கள் பரவசமாக மட்டுமல்லாமல், பாடம் கற்றுக் கொடுப்பவைகளாகவும் இருக்கின்றன.
சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருவதற்கும் அதுதான் காரணம். வைரலாகும் வீடியோவில், சர்க்கஸில் உள்ள சிங்கம் ஒன்று, ரிங் மாஸ்டரை தாக்குகிறது. அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோவை animals_powers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்த சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுவிட்டது.
சர்க்கஸ் பார்க்க வந்த பார்வையாளர்கள் அனைவரும் சிங்கத்தின் திடீர் தாக்குதலால் அதிர்ந்து போகின்றனர். வீடியோவைப் பார்க்கும் நமக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
சில நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் சீறும் சிங்கத்தின் சீற்றம் அச்சத்தை அதிகரிக்கிறது. ஆனால் ரிங் மாஸ்டர், சமயோஜிதமாக செயல்படுகிறார்.
அவரை தப்பிக்க வைக்க, உடனடியாக பலர் உதவிக்கு வருகின்றனர். மனிதர்களுக்கு மட்டும்தான் ஆதரவு கிடைக்குமா என்ன? சிங்கத்திற்கும் அதனுடைய சக சிங்கம் தோள் கொடுக்க அருகில் வருகிறது.
மேலும் படிக்க | சர்ப்ரைஸ் கொடுத்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்வூட்டிய திமிங்கல வீடியோ
தாக்கும் சிங்கத்தின் சீற்றமும், தாக்குதலை தவிர்க்கும் மனிதனின் முயற்சியும் வைரலானாலும், ”இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியமே” என்ற பழமொழியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
காட்டில் இருக்க வேண்டிய விலங்கை கூண்டில் வைத்து சர்க்கஸ் காட்டினாலும், சிங்கத்தின் இயல்பு சீறுவது தானே? அதேபோல, சிங்கத்தை தனது பயிற்சியால் பேச்சைக் கேட்க வைத்தாலும், விலங்கின் அடிப்படை குணம் வெளிப்படும் தருணங்கள் என்றும் மாறாது என்பதை உணர்த்தும் வீடியோ இது.
இப்படி தாக்குதல்கள் நடக்கலாம் என்பதை சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிந்து, அதற்கேற்றாற்போல ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR