போச்சா....: சீன் போட போய் சட்டை பறிபோன பரிதாபம், வைரல் வீடியோ

Funny Viral Video: சீன் போட்டு ரீல் வீடியோ எடுக்க நினைத்த நபர் சட்டையை இழந்து நிற்பதை பார்க்க பரிதாபமாக இருந்தாலும், சிரிப்பும் வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2022, 02:07 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
போச்சா....: சீன் போட போய் சட்டை பறிபோன பரிதாபம், வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஒரு வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ டெல்லியில் உள்ள சிக்னேச்சர் பாலம் அருகே ரீல் வீடியோ எடுத்த ஒரு நபர் பற்றியது. இந்த வீடியோவில் நடக்கும் ஒரு விஷயத்தை பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது. 

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள் 

லட்சக்கணக்கான வியூஸ்களை அள்ளிய வீடியோ 

இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர். சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், சிக்னேச்சர் பாலத்தின் அருகில் ஒருவர் சாலையோரம் நிற்பதைக் காண முடிகிறது. 

வீடியோவின் ஆரம்பத்திலேயே அந்த நபர் ரீல் வீடியோவை உருவாக்குவது தெரிகிறது. ஆனால், இதற்கிடையில் அங்கு நடக்கும் ஒரு விஷயத்தால் வீடியோவை காண்பவர்களால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. 

ரீல் வீடியோ உருவாக்கும் ஒரு நபர், தனது சட்டையை கழற்றி காற்றில் வீசுகிறார். ஆனால் அப்போது அந்த வழியாக சென்ற பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு நபர் அந்த சட்டையை பிடித்து அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். இந்த காட்சியை வீடியோவில் பார்ப்பதும் மிகவும் வேடிக்கையாக உள்ளது. சீன் போட்டு ரீல் வீடியோ எடுக்க நினைத்த நபர் சட்டையை இழந்து நிற்பதை பார்க்க பரிதாபமாக இருந்தாலும், சிரிப்பும் வருகிறது.

சட்டையை பறிகொடுத்த நபரின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by memes (@ghantaa)

தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோ சில காலம் பழையதாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒருமுறை முழு முனைப்புடன் பரவி வருகிறது. இந்த வீடியோ ghantaa என்ற பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பீட்சா டெலிவரி பெண்ணுக்கு தர்ம அடி, 4 பெண் ரவுடிகளின் வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News