குழந்தைகளை மகிழ்விக்க ஒரு படகில் இருந்து சாண்டா கிளாஸ் தலைகுப்பர விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விளக்குகள் உலகம் முழுவதும் பிரகாசிக்க தொடங்கிவிட்டது. கேக் வாசம் வீசும் இந்த சீசனை வீட்டிற்குள் கொண்டாடினால் எப்படி?. உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி ஜெர்மன் நாட்டின், பிராண்டன்பர்க் என்னும் பகுதியில் வசிக்கும் மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டார்கள். 


இதை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் சாண்டா கிளாஸ் ஒருவர் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு படகில் இருந்து தலைகுப்பர விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெருங்களிப்புடைய கிளிப் கேப் டவுனில் சாக்கின் கடற்கரைப் பகுதியில் படகு ஒன்று நுழைந்தது. அந்த அப்படகில் முன்பு நின்று கொண்டிருந்த அவர் படகிலிருந்து கீழே குதித்துள்ளார் அப்போது அவர் நிலை தடுமாறி தலைகுப்பர கீழே விழுந்தார். சாண்டா கிளாஸ் வழக்கமான "ஹாய்-ஹொஸ்" முழக்கம் திடீரென்று "ஹேடா!" என மாறியது. 


சாண்டா கிளாஸ்-யை காண்பதற்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் இதை கண்டு கலகல என சிரித்தனர். இந்த சம்பவத்தை படகின் வெளியில் இருந்தவர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதுமட்டும் இன்றி, படகின் உள்ளே இருக்கும் ஒருவரும் அந்த சம்வத்தை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் சிரிப்பு மழை பொலிந்து வருகின்றனர். மேலும், ஒருவர் சாண்டாவின் பரிசு சாக்குகள் சேதமடையாத நிலையில் இருப்பதாக நம்புகிறோம், எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பியதை வழங்குவார் எனவும் தெரிவித்துள்ளனர். 


அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது....