தினேஷ் கார்த்திக்கை பார்க்க மைதானத்திற்குள் வந்த நாகப்பாம்பு? வைரல் வீடியோ
கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு திடீரென நுழைந்ததால் போட்டி திடீரென நிறுத்தப்பட்டது. பாம்பு வெளியேறிய பிறகு மீண்டும் ரஞ்சி கிரிக்கெட் தொடங்கியது.
கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு புகுந்த இந்த வீடியோ பழைய வீடியோ என்றாலும் ஐபிஎல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் வைரலாகியிருக்கிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது திடீரென மைதானத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது. 2019 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற போட்டியின்போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்தப் போட்டியில் ஆந்திரா - விதர்பா அணிகள் மோதிக் கொண்டன. இரு அணிகளும் முதல் நாள் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திற்குள் பாம்பு சென்றிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பாம்பு முதலில் அந்த மைதானத்திற்குள் என்டிரி கொடுத்திருக்கிறது. அதனை அங்கிருந்த ஊழியர்களும், வீரர்களும் பார்த்துவிட்டனர். இதன்பின்னர் பாம்பு செல்லும் வரை போட்டி தொடங்கவில்லை. சிறிது நேரம் பாம்பு செல்வதற்காக கொடுக்கப்பட்டது. பாம்பு வெளியேறிய பிறகு ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் ரஞ்சி போட்டியில் களம் கண்டன. இந்த வீடியோவை பிசிசிஐ டொமஸ்டிக் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. அதில் பாம்பு வளைந்து நெளிந்து வேகமாக செல்கிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
சிறிய பாம்பு தான் அது. இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்திருக்கும் பிசிசிஐ, மைதானத்திற்குள் திடீரென வித்தியாசமான பார்வையாளர் வந்துவிட்டதால் போட்டியை குறித்த நேரத்தில் தொடங்க முடியவில்லை. சிறிது தாமதம் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தது. அதற்கு கமெண்ட் அடித்த நெட்டிசன்கள், மைதானத்தில் வங்கதேச அணி விளையாடுகிறது என நினைத்து பாம்பு வந்துவிட்டதாக தெரிகிறது என கிண்டலடித்துள்ளனர்.
வங்கதேச அணியினர் எப்போது கிரிக்கெட்டில் வென்றாலும் நாகினி ஆட்டத்தை மைதானத்திற்குள் ஆடுவார்கள். இதனை மனதில் வைத்து அவர் அவ்வாறு டிவிட்டரில் எழுதியிருக்கிறார். இன்னும் சிலர் தினேஷ் கார்த்திக்கை பார்க்க பாம்பு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | டிவி-யில் கார்ட்டூன் பார்த்து கதறி கதறி அழுத நாய்: கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ