Delhi Metro Viral Video: டெல்லி மெட்ரோ வைரல் வீடியோ: இருக்கைக்காக சண்டையிட்ட இருபெண்கள்!

Metro Women Fight Video: பயணம் செய்யும் சகமனிதர்களின் குணாதிசயங்களைக் கவனியுங்கள். அவர்களுடன் சண்டையிட வேண்டாம். புன்னகை போது. இருக்கைக்காக டெல்லி மெட்ரோவில் இரு பெண்கள் சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2023, 04:23 PM IST
  • பயணம் செய்யும் சகமனிதர்களின் குணாதிசயங்களைக் கவனியுங்கள்.
  • பயணங்கள் கொடுக்கும் அனுபவங்கள் அற்புதமானவை.
  • மெட்ரோவில் இரு பெண்கள் சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Delhi Metro Viral Video: டெல்லி மெட்ரோ வைரல் வீடியோ: இருக்கைக்காக சண்டையிட்ட இருபெண்கள்! title=

Delhi Metro Viral Video: டெல்லி மெட்ரோவின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. இதில் சண்டை முதல் நடனம் வரையிலான பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இரு பெண்கள் இருக்கைக்காக சண்டை போடுவதைக் காணலாம். இருக்கை காரணமாக ஏற்பட்ட தகராறு, ஒருகட்டத்தில் வன்முறையாக மாறுகிறது. ஒரு பெண் தனது பையில் இருந்து பெப்பர்  ஸ்பிரேயை எடுத்து மற்றொரு பெண்ணின் முகத்தில் அடிக்கிறார். இந்த சம்பவத்தின் போது மெட்ரோ ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அதை வீடியோ ஆக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.

காலை எழுந்தவுடன் அலுவலகம், முடிந்தவுடன் வீடு என்ற இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலனோர் அலுவலகம் செல்லவும், வெளியே பயணம் செய்யவும் பொதுப் போக்குவரத்தை தான் பயன்படுத்துகின்றனர். அதில் கூட்டச் நெரிசல் காரணமாக இருக்கைக்காக சண்டையிடுவதும், தனது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் முகம் சுளிக்கும் படி ஏதாவது செய்வது என அன்றாடம் ஏதாவது ஒரு சம்பவம் அரங்கேறிய வண்ணம் உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லி மெட்ரோவில் நடந்துள்ளது. அதாவது மெட்ரோவில் இரு பெண்கள் சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க: சீண்டிய இளைஞர்களை வெச்சி செஞ்ச பெண்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

வீடியோ கிளிப்பில், டெல்லி மெட்ரோவில் இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதைக் காணலாம். அடுத்த நொடியில், அதில் ஒரு பெண் பெப்பர் ஸ்பிரேயை எடுத்து, இதை உன் முகத்தில் அடித்து விடுவேன் என மற்ற பெண்ணை மிரட்டுகிறார். தற்போது வாக்குவாதம் வன்முறையாக மாறுகிறது. அந்த பெப்பர் ஸ்பிரேயை பிடிக்க முயலும் போது, பெப்பர் ஸ்பிரே கையில் வைந்த்திருந்த அந்த பெண், மற்ற பெண்ணின் முகத்தின் மீது அடிக்கிறார். அதன் பிறகு, மெட்ரோ கோச்சில் உள்ள ம்ற அனைவரும் ஸ்ப்ரே காரணமாக மூச்சு திணறல் ஏற்படுகிறது.

இந்த வீடியோவை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "டெல்லி மெட்ரோவில் மேலும் ஒரு காட்சி" என்ற தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் பாக்கா. கிளிப் அதில் இரண்டு பெண்கள் டெல்லி மெட்ரோவில் இருக்கை பிரச்சினை காரணமாக சண்டையிடுவதைக் காணலாம். 

பயணங்கள் கொடுக்கும் அனுபவங்கள் அற்புதமானவை. சில நேரங்களில் நமக்குக் கிடைக்கும் மனிதர்களால் நம் வாழ்வில் பெரிய மாற்றங்கள் கூட ஏற்படக் காரணமாக இருக்கிறது. அதேபோல பயணம் செய்யும்போது, சில காரணங்களுக்காக சண்டை ஏற்படுவதும் உண்டு. எதுவாக இருந்தாலும் பயணங்கள் செய்யும் போது சிறு புன்னைகயுடன் பயணியுங்கள். அந்த பயணம் உங்களுக்கு நிறைவை தரும்.

மேலும் படிக்க: ஒரு சீட்டுக்கு இப்படியா..ஓடும் ரயிலில் களேபரம்..அதிர வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News