புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த மகேந்திர சிங் தோனி, தற்போது கிரிக்கெட் களத்திலிருந்து தள்ளி இருந்தாலும், பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் அவர் இடம் பிடித்து வருகிறார். அவர் மைதானத்தில் விளையாடும் போது பேட்டிங், கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங் மற்றும் அணியை வழிநடத்தி செல்வது என அடிக்கடி செய்திகளில் வந்த எம்.எஸ்.தோனி, கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு அவரது வாழ்க்கை முறை குறித்து அறிந்துக்கொள்ள அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வமாக உள்ளனர். தற்போதுக்கூட அவரது வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி (Dhoni viral video) வருகின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அவரது மனைவி சாக்ஷியால் பகிரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் பல அற்புதமான வாகனங்களின் தொகுப்பு:
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) பைக்குகளையும் கார்களையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம் தான். உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான வாகனங்களின் தொகுப்பு அவரிடம் உள்ளது.


தோனி அடிக்கடி தனது வாகனங்களை எடுத்துக்கொண்டு வெகுதூரம் பயணிப்பது வழக்கம். சில வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் (MS Dhoni Video) தனது ரசிகர்களுக்காக பகிர்ந்துக் கொண்டும் இருக்கிறார். 


ALSO READ | MS Dhoni: 2020-யிலேயே ஓய்வு பெற்றுவிட்டாலும், இந்த பட்டியலில் இன்னும் தலதான் முதலிடம்


தோனியின் சொகுசு கார்கள் :
ஆனால் ரசிகர்கள் தங்கள் கிரிக்கெட் வீரர்கள் எந்த மாதிரியான கார்கள் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். தற்போது தோனியிடம் உள்ள சில கார்களை (ms dhoni car collection) குறித்து ரசிகர்கள் அறிந்துக் கொண்டார்கள். ஆம், அவரது பண்ணை வீட்டில் தான் தோனியின் சொகுசு கார்கள் உள்ளன. அதாவது தோனியின் மனைவி சாக்ஷி ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தோனியிடம் உள்ள கார்கள் குறித்து ரசிகர்கள் தெரிந்துக் கொண்டார்கள். 


இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ:
இந்த வீடியோவை சாக்ஷி (Sakshi Dhoni Video) தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஸ்காட்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷெட்லேண்ட் போனி இனத்தின் குதிரை முதலில் காணப்படுகிறது. இதில், குதிரை தோனியின் கார்களின் கேரேஜ் முன் புல் சாப்பிடுவதைக் காணலாம். இதற்குப் பிறகு, தோனியின் மிக அழகான கார்கள் வீடியோவில் தெரிகிறது. தோனியின் விருப்பமான நாயும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. தோனிக்கு பல செல்லப்பிராணிகளும் உள்ளன. 


 



ஊடக அறிக்கையின்படி, தோனியிடம் போர்ஸ் 911 உட்பட பல சொகுசு கார்கள் (Dhoni Luxury Cars) உள்ளன. இந்த சூப்பர் காரின் விலை (porsche 911 price in india) சுமார் 2.50 கோடி ரூபாய், இது தவிர தோனிக்கு போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் என்ற காரும் உள்ளது. இந்த கார் தோனிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஐ.பி.எல். (IPL 2021) தொடர் மீண்டும் நடக்கும் போது களத்தில் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 


ALSO READ | MS Dhoni vs Virat Kohli: WTC தோல்விக்குப் பிறகு ட்விட்டரில் துவங்கிய புதிய விவாதம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR