சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் Bus Day என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் கூறை மீது ஏறி ரகலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் கல்லூரி தொடங்கப்பட்டுள்ள நிலையில்., மாணவர்கள் பேருந்து தினம் என்ற பெயரில் மாநகர பேருந்துகளை சிறைபிடித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ரகலையில் ஈடுப்பட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளது காவல்துறை. 


சென்னை செனாய் நகர் புல்லா அவென்யூவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 40A என்ற மாநகர பேருந்தை பயச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



பேருந்தின் முன்பக்கம் பேனர் கட்டிய மாணவர்கள் பேருந்தில் ஏறிக்கொண்டதோடு மட்டுமின்றி பேருந்தின் மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் முன்னே பைக்கில் கூச்சல் எழுப்பிக்கொண்டே சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட பேருந்து ஓட்டுனரும் பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளை செய்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் என கீழே விழுந்தனர்.


தகவல் தெரிந்து சம்பவயிடத்திற்கு சென்ற காவல்துறையினரை பார்த்ததும் மாணவர்களும் அனைவரும் ஓட்டம் பிடிக்க சிக்கிய 13 பேருக்கு அறிவுறை வழங்கி அனுப்பி வைத்தது காவல்துறை. அதேபோல் ராயப்பேட்டை அருகே 21 எண் பேருந்தை சிறைபிடித்து பேருந்தின் மீது ஏறியபடியும் ஜன்னல் கம்பிகளை பிடித்தபடியும் தொங்கிக்கொண்டே பயணம் செய்தபடி அட்டகாசம் செய்தனர்.