பீகாரில் துப்பிய குட்காவை நக்கி சுத்தம் செய்யுமாறு அடித்த ஜவான் - இணையத்தில் வீடியோ வைரல்
பீகாரில் குட்கா துப்பிய நபரை பிடித்து இழுத்து வந்த ஜவான், அவரை துப்பிய குட்காவை நாக்கால் நக்கி சுத்தம் செய்யுமாறு சரமாரிய தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகின்றன. அதில் இரக்க குணம் கொண்ட வீடியோக்கள் மற்றும் மனதை நெகிழ வைக்கும் வீடியோக்களை அதிகம் கடந்து செல்வோம். அதேநேரத்தில் மனதை கணக்கச் செய்யும் வீடியோக்களும் அதிகம் பகிரப்படுகின்றன. அந்தவகையில் பீகாரில் குட்கா துப்பிய நபரை ஜவான் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜவானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்
@samastipurtown என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பீகாரின் சமஸ்திபூரில் உள்ள படேல் மைதான் கோலம்பரில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, அங்கு ஒரு நபர் ஓடும் பேருந்தில் இருந்து குட்காவை துப்பியதாகவும், அதில் ஒரு பகுதி.. டீம் ஹாக்ஸின் ஒரு போலீஸ்காரரின் சீருடையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜவான், கோலம்பார் ஸ்டேடியம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, சாலையில் அவர் துப்பிய குட்காவை நக்கி சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜவானிடம் அடிவாங்கியவர் முசாபர்பூரைச் சேர்ந்த பரத் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது அவர் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து சமஸ்திபூர் எஸ்பி வினய் திவாரி இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் வீடியோக்கள் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததாகக் கூறினார். ஏற்க முடியாத செயலில் ஈடுபட்ட அந்த காவலர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ