வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு நாள்தொறும் பலவித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்து நாம் நமது கவலைகளை மறந்து வேறு உலகுக்கு சென்று விடுகிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை நாம் தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். இணையத்தில் நடனங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புவதுண்டு. பல பயனர்கள் தங்கள் அசத்தலான நடனங்களின் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


சமீப காலங்களில் அசத்தலான இசை, அட்டகாசமான நடன அசைவுகளின் காரணமாக மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பாடல்களின் வரிசையில் ‘ரௌடி பேபி’ பாடலும் ஒன்றாகும். வெளியானது முதல், ரவுடி பேபி பாடல், அதன் வித்தியாசமான பாடல் வரிகள் மற்றும் துள்ளலான நடன அசைவுகள் காரணமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. 


2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி மாஸ் நடனம் ஆடியுள்ளார்கள். அந்த பாடலில் இடம்பெற்றுள்ள சாய் பல்லவி மற்றும் தனுஷின் அசாத்திய நடன அசைவுகளை பலர் ஆடிப்பார்த்துள்ளனர். எனினும், அனைவராலும் அதை அப்படியே ஆட முடியவில்லை. 


மேலும் படிக்க | இது ஒரு அழகிய மழைக்காலம்: இணையவாசிகளை ஏங்க வைத்த வைரல் வீடியோ 


தற்போது, ​​கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நடன இயக்குனர் ஜோடி இந்த பாடலுக்கு தாங்கள் ஆடிய நடன வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. சௌரப் மற்றும் அனோஷாவின் ஜோடி, வீடியோவில், தனுஷ் மற்றும் சாய் பல்லவியைப் போலவே உடை அணிந்து அவர்களைப் போலவே டான்ஸ் ஆடியுள்ளனர். டான்ஸ் ஆடும்போது இவர்களின் துடிதுடிப்பும், எனர்ஜியும், நடன அசைவுகளும் காண்பவர்களை பிரமிக்க வைக்கிறது. 


“ரவுடி பேபிஸ் இங்கே ராக் செய்ய வந்துள்ளோம். இது உண்மையான ரவுடி பேபி டான்சுடன் 90% ஆவது பொருந்துகிறதா என்று சொல்லுங்கள்” என்று இந்த வீடியோவில் கேட்கப்பட்டுள்ளது. இந்த ஜோடி @jodianoorabh என்ற பெயரில் தங்கள் பதிவுகளை பகிர்கிறார்கள். இவர்களுக்கு 4.95 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.


ரவுடி பேபி பாடலுக்கு மாஸ் ஆட்டம் போட்ட ஜோடியின் வீடியோவை இங்கே காணலாம்: 



சமூக ஊடக பயனர்களுக்கு இந்த நடனம் மிகவும் பிடித்துப்போனது. இணையவாசிகள் இந்த ஜோடியை பாராட்டி வருகிறார்கள். பலர் கமெண்ட் பகுதியில் தங்கள் அன்பை தெரிவிக்கும் வகையில் எமோஜிகளை வாரி வழங்கியுள்ளனர். மாடலும் நடிகையுமான கௌஹர் “லவ் லவ்” என்று கமெண்ட் செய்துள்ளார். 


‘யு ராக்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “தனுஷ் மற்றும் சாய் பல்லவி இந்திய சினிமாவின் சிறந்த டான்சர்கள். ஆனால், நீங்களும் அச்சு அசல் அப்படியே ஆடியுள்ளீர்கள். பாரட்டுக்கள்” என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க | விசித்திரமான விபத்தின் வைரல் வீடியோ: சிரிக்காம இருக்க முடியாது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR