Viral Video: ஜீப்பின் மீது துள்ளி குதித்து மாஸ் காட்டும் சிறுத்தையின் வைரல் வீடியோ

தான்சானியாவில் ஜங்கிள் சஃபாரி வாகனத்தின் கூரை மீது துள்ளி குதித்து மாஸ் காட்டும் சிறுத்தையின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2022, 02:06 PM IST
Viral Video: ஜீப்பின் மீது துள்ளி குதித்து மாஸ் காட்டும் சிறுத்தையின் வைரல் வீடியோ title=

இணைய உலகத்தில், பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. தினம் தினம், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சிறுத்தை ஒன்றின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

தான்சானியாவில் செரெங்கேட்டி தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று சஃபாரி வாகனத்தின் மீது துள்ளி குதித்து கூலாக உட்கார்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

ஜங்கிள் சஃபாரி என்னும் காட்டில் பயணம் சென்றவர்களை திகைக்க வைத்தது அந்த சிறுத்தை. அவர்களின் வாகனத்தின் மீது  சிறுத்தை குதித்த அதிர்ச்சியூட்டும் வகையில் அதே சமயம் வசீகரிக்கும் வகையிலான காட்சியை வீடியோவில் காணலாம். சிறுத்தை முதலில் வாகனத்தின் சக்கரத்தின் மீது தாவும் போதும், அதன் மீது உட்கார்ந்து கொண்டு கூலாக  இருப்பதை வீடியோ காட்டுகிறது.

டயர்களில் சிறிது நேரம் கால்களை நீட்டு பயிற்சி பிறகு, சிறுத்தை வாகனத்தின் உள்ளே ஏறி, பின்னர் வாகனத்தின் கூரையின் மீது ஏறுவதைக் காணலாம். இந்த நேரத்தில், சிறுத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சர்யத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. அவர்களுக்கு சிறுத்தை  தீங்கு விளைவிக்கவில்லை. இதனிடையே சிறுத்தையின் குறும்புகளை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர்.

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

சிறுத்தை மற்றும் சஃபாரி செல்பவர்களுக்கிடையிலான அசாதாரணமான உரையாடலை சுரேந்தர் மெஹ்ரா IFS "Man in Wild" என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

வீடியோவை இங்கே காணலாம்:

 

இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. ஒரு பயனர் “எவ்வளவு அருமை! சீட்டா மிகவும் கூலாக இருக்கிறது!''  என குறிப்பிட்டுள்ளார், மற்றொருவர் கருத்து தெரிவிக்கையில், “காடு என்னும் தனது வீட்டில் இருப்பதால் மிகவும் நிம்மதியாக உணர்கிறது. இருந்தாலும் அருமையான வீடியோ” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News