ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து, ஹோலி பண்டிகையை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் ஒரு ஜோடி 'ரொமான்சிங் ஸ்டண்ட்' செய்வது மொபைல் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை காரில் பயணித்த ஒருவர் படம்பிடித்ததாக தெரிகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது பெண் அமர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது போன்ற வைரலான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் பி2 பைபாஸில் நடந்துள்ளது. தற்போது பைக்கின் பதிவு எண்ணின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட தம்பதியை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | ஆசையாய் காதல் தூது விடும் பெண்! பாலைவனத்தில் நடக்கும் தவளைக் காதல் நாடகம்



முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், அஜ்மீர் நகரில் ஒரு ஜோடி மோட்டார் சைக்கிளில் 'முத்தம் ஸ்டண்ட்' செய்தது கேமராவில் பதிவாகி சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோவும் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது பெண் அமர்ந்திருந்தார். மறுபுறம் ஆண் அந்த பைக்கை ஓட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வழியாக சென்ற ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


தற்போது வைரலாகும் வீடியோவில், பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது பெண் அமர்ந்து, காதலன் பைக்கை ஓட்டிச் செல்வது போல் காட்சியளிக்கிறது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் காணப்படுகின்றனர். விசாரணைக்குப் பிறகு, இந்த வீடியோ நகரின் ஜவஹர் சர்க்கிளில் இருந்து பி-2 பைபாஸில் நடந்ததாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறையும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மற்றும் சிறுமியை விரைவில் கண்டுபிடித்து விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | Viral video: வசூல் முடிந்ததும் வேஷத்தை கலைக்கும் பிச்சைக்காரன்..! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ