ஆசையாய் காதல் தூது விடும் பெண்! பாலைவனத்தில் நடக்கும் தவளைக் காதல் நாடகம்

Viral  Frog Video: பாலைவனத்தை சோலைவனமாக நினைத்துப் பாட்டு பாடுமா தவளை? தவளை தன் வாயால் கெடும் என்பது பழமொழி! பாடும் குயில் என்றே சொல்லுமளவுக்கு இசைக்கும் தவளையோசை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 7, 2023, 10:15 PM IST
  • தவளை தன் வாயால கெடும் அது பழமொழி!
  • ‘சிங்கர் குயின் தவளை’
  • பாலைவனத்தில் பாடும் தவளை
ஆசையாய் காதல் தூது விடும் பெண்! பாலைவனத்தில் நடக்கும் தவளைக் காதல் நாடகம் title=

Desert Frog Music Video: வித்தியாசமான விஷயங்களால் நிரம்பியுள்ள சமூக ஊடக உலகம் ஆச்சரியமான மற்றும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வீடியோக்களில் பல விஷயங்களை நம்ப முடியவில்லை. சில சமயம் இவை புனையப்பட்டவையாகவும் இருக்கிறது. எனவே, வீடியோவைப் பார்த்தால் மகிழ்ச்சியுடன் சிரிப்பதுடன் சிலர் நிறுத்திக் கொள்கின்றனர். அதன் நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்வதில்லை.

சில சமயம் ஆச்சரியத்தை கொடுக்கும் வீடியோக்கள், சில சமயம் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. சோகத்தையும் மட்டுமல்ல, சுகத்தையும் கொடுக்கும் வீடியோக்களில். விலங்குகளின் வீடியோகள் அனைவராலும் விரும்பப்படுகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்பு, குரங்கு, சிங்கம், புலி, நாய், பூனை என சமூக ஊடகங்களில்  விலங்குகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். விலங்குகலின் பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. தவளை ஒன்று ரீங்காரமிடும் சப்தம் இசையாய் ஒலிக்கிறது. அது, நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

குயிலாய் மாறிய தவளை

சில நொடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவில், ஒற்றைத் தவளை ஒன்று தென்படுகிரது. தவளைகள் எப்போதும் சப்தமிட்டுக் கொண்டே இருக்கும். தவளை, தான் இருப்பதை தனது சப்தத்தால் காட்டிக் கொடுத்து, இரையாகிவிடும். அதைத்தான், ‘தவளையும் தன் வாயால் கெடும்’ என்று சொல்வார்கள்.

ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் தவளையும் வித்தியாசமாய் இருக்கிறது. அது கொடுக்கும் சப்தமும் இன்னிசையாய் இனிக்கிறது. 

மேலும் படிக்க | இந்த கலர்ல மலைப்பாம்பா? சிறுமியிடம்....பதற வைக்கும் வீடியோ வைரல்

பாலைவனத் தவளை

தவளைகள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய (Amphibians) உயிரின. பெரும்பாலும் நீர்நிலைகளுகு அருகில் இருந்தாலும், நீர்நிலைக்ள் இலலத வறண்ட பாலைவனப் பகுதிகளிலும், பனிப்பிரதேசங்களிலும்கூட சில தவளையினங்கள் உயிர் வாழ்கின்றன. 

மேலும் படிக்க | பூனையுடன் விளையாடும் பாம்பு: வைரலாகும் பூனையின் மாஸ் ரியாக்‌ஷன்

தவளையின் சப்தமும் இனசேர்க்கையும்
தவளைகளின் பெரும்பாலும் இனச்சேர்க்கைக்காகவே ஓசை எழுப்புகின்றன. பெண் தவளையின் ஓசையைக் கேட்கும் ஆண் தவளை, நமக்கு தூது வந்தாச்சு என்று மகிழ்ச்ச்யுடன் வந்து பெண் தவளை மேல் உப்புமூட்டை ஏறிக் கொளும்.

இந்த நிகழ்வுக்குப்பின் பெண் தவளை நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும். முட்டைகள் வெளிவந்ததும், பெண்ணின் மீது ஒட்டியிருக்கும் ஆண் தவளை அந்த முட்டைகளின்மேல் தன் விந்தணுக்களை வெளிவிடும். தவளைகளில் வெளிக்கருவுறுதல் மட்டுமே நடைபெறும்.

கருவுற்ற முட்டைகளிலிருந்து வளர்ந்து, வெளிவரும் குட்டித் தவளைகளை ’தலைப்பிரட்டை’ என்று சொல்கிறோம். தலைப்பிரட்டைகள், நீர்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிர்களையும், நுண்தாவரங்களையும், கொசுவின் முட்டைப்புழுக்களையும் உண்டு வளரும்.

மேலும் படிக்க | பாம்பு மூட்டைன்னு தெரியாம கைய வச்சுட்டானே! துள்ளி குதித்து ஒடும் இளைஞரின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News