’பூனை காணவில்லை’ அடையாளம் ‘உதட்டில் மச்சம்’... கண்டுபிடித்தால் ரூ.5000 சன்மானம்
கோவையில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
’கோவை குசும்பு’ கேள்விபட்டிருப்பீர்கள். அதற்கு ஒரு உதாரணமாக ஒரு சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. நக்கல், நையாண்டிக்கு பேர் போன கோவை, ராமநாதபுரம் பகுதி சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர், அப்பகுதி மக்களை மட்டுமல்ல இணையவாசிகளின் புருவத்தையும் உயர வைத்துள்ளது. அந்த போஸ்டரில், பூனை ஒன்றைக் காணவில்லை. அதனைக் கண்டுபிடித்து தருபவருக்கு 5 ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | பெண்களுக்காக எடையை குறைக்கும் அரசு! இது LPG சிலிண்டரின் Weight Loss
இதைக் கேள்விப்பட்டவுடன், பூனையை எப்படி கண்டுபிடிப்பது? அது சாத்தியமா?, வளர்த்தவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்? என அடுக்கடுக்கான கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். ஆனால், நீங்கள் இதனையெல்லாம் யோசிப்பீர்கள் என முன்கூட்டியே சிந்தித்த அவர்கள், பக்கவான அடையாளத்தையும் பட்டியலிட்டுள்ளார்கள். பூனையின் பெயர் ஜெசி (Jessi Cat). அதற்கு வயது 6 என குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடையாளம் உங்களுக்கு போதுமானதாக இருக்காது என்று அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால் தான், பூனையை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், அதன் ‘உதட்டில் மச்சம்’ இருக்கும் என்பதை கொட்டை எழுத்தில் எழுதியுள்ளார்.
ALSO READ | ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்..!
பூனை காணாமல் போன தேதி நவம்பர் 29 என கூறியுள்ள உரிமையாளர், இந்த அடையாளங்களுடன் எங்காவது பூனையை பார்த்தால் தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி தொலைபேசி எண்ணையும் பதிவிட்டுள்ளார். மேலும், சரியாக பூனையை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளார். மக்களே! யாரேனும் இந்த அடையாளங்களுடன் பூனையை பார்த்தால், தவறாது அந்த உரிமையாளரிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Telegram Link: https://t.me/ZeeNewsTamil