கொல்கத்தா: கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தொடங்கி இன்று வரை மக்களை பாடாய் படுத்து வருகிறது. இந்த வைரஸ் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது. மேலும் பலர் இந்த ஆபத்தான வைரசால் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தையும் மனதில் வைத்து, கொல்கத்தாவில் ஒரு கொரோனா அருங்காட்சியகத்தை கட்டுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தகவலை மேற்கு வங்க மருத்துவர்கள் மன்றத்தின் அதிகாரி டாக்டர் ராஜீவ் பாண்டே வழங்கினார்.


ராஜீவ் பாண்டே, தகவல்களை வழங்கும் போது, ​​இந்த அருங்காட்சியகத்தில், முகக்கவசங்கள் (Facemask), பிபிஇ கருவிகள், சேனிடைசர்கள், கிருமி நாசினிகள், கையுறைகள் ஆகியவையும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ளதாக இருந்த அனைத்து பொருட்களும் காட்சியில் வைக்கப்படும் என்று கூறினார். இந்த அருங்காட்சியகத்தை உருவாக்க மாநில அரசுக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. இறுதி ஒப்புதலுக்காக பணிகள் காத்திருக்கின்றன.


இந்த தொற்றுநோய் குறித்து டாக்டர் பாண்டே கூறுகையில், 'இந்த வகையான தொற்றுநோய் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நாம் எதிர்கொள்ளும் இதுபோன்ற விஷயங்களை நமது தாத்தா பாட்டி கூட பார்த்திருக்க மாட்டாரள்” என்று கூறினார்.


இந்த தொற்றுநோய் நாடு முழுவதும் பலரைக் கொன்றது. இதன் காரணமாக பல மருத்துவர்களும் உயிர் இழந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தன்னுடன் பணிபுரிந்த மருத்துவர்களை பறிகொடுத்த பரிதாபத்தையும் டாக்டர் பாண்டே பகிர்ந்து கொண்டார்.


இது குறித்து அவர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று காரணமாக, மாநிலத்தில் சுமார் 90 மருத்துவர்கள் இறந்தார்கள். ஆனால் இதுவும் கடந்து போகும். வருங்கால சந்ததியினருக்கு இந்த தியாகத்தை நினைவூட்ட வேண்டியிருக்கும். அதனால்தான் ஒரு அருங்காட்சியகத்தை கட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.’ என்றார்.


ALSO READ: பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!


இறுதியில், டாக்டர் பாண்டே இந்த வைரஸை எதிர்த்துப் போராடியபடியே பறிபோன உயிர்களின் கதைகளும் இந்த அருங்காட்சியகத்தில் சொல்லப்படும் என்றார். இதன் மூலம் இந்த கொடூரமான வைரஸ் எவ்வாறு பலரது உயிரை பலியாக்கியது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். COVID-19 நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். இது மட்டுமல்லாமல், கொரோனா வைரஸ் காரணமாக உயிர் இழந்த மருத்துவர்களுக்கான நினைவுச்சின்னமும் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும்.


அருங்காட்சியத்தை உருவாக்குவதற்கான யோசனையை டாக்டர் அர்ஜுன் தாஸ்குப்தா வழங்கினார். அவர் இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி கூறுகையில், “தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது, எப்போதிருந்து தடுப்பூசிக்கான (Vaccine) செயல்முறை தொடங்கியது ஆகியவற்றிற்கான ஆவணங்களை நாங்கள் தயாரிப்போம்."  என்றார். தொற்றுநோய்க்கு எதிரான ஒட்டுமொத்த மனிதகுலத்தின் போராட்டம் இங்கே காண்பிக்கப்படும். மேலும், உலகம் முழுவதும் இந்த வைரசுக்கு எதிராக எவ்வாறு போராடியது என்பது குறித்தும் இந்த அருங்காட்சியகத்தில் காண்பிக்கப்படும்.


இந்த அருங்காட்சியகத்திற்கான நிலம் குறித்து அவர் கூறுகையில், 'இந்த அருங்காட்சியகத்திற்கு ஏற்ற இடத்தில் பொருத்தமான விலையில் நிலத்தை வழங்குமாறு மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளது. அரசாங்கம் எங்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மீதமுள்ள ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொள்வோம்’ என்றார்.


இந்த வகையில், இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டால், வரும் தலைமுறை கொரோனா காலம் பற்றிய பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல இடமாக இது அமையும்.


ALSO READ: இந்தியாவிடம் COVID-19 தடுப்பூசி கோரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ள கம்போடியா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR