டைம் டிராவல் சாத்தியமா? மர்மமான சம்பவங்களின் பின்னணியில் இந்தக் கேள்வி எவ்வளவு காலமாக உள்ளது என்பது தெரியவில்லை. இது தொடர்பான பல சம்பவங்கள் உலகின் பல்வேறு மூலைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வருகின்றன. ஆனால் இன்றுவரை அதன் உண்மை என்ன என்பதை யாராலும் தெளிவாக காட்ட முடியவில்லை, அவ்வப்போது பலர் டைம் டிராவல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர், ஆனால் இதற்கான உண்மையான சான்றுகள் இன்னும் யாராலும் வழங்க முடியவில்லை. ஆனால் இங்கு வைரலாகும் வீடியோவில் நீங்கள் நிஜமாக டைம் டிராவல் செய்யும் ஒரு பெண்ணை காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில் தற்போது சமீப காலமாக இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த காணொளி சாலை வழியாக சென்று கொண்டிருந்த பெண்ணின் வீடியோவாகும். ஒரு நபர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக வீடியோ ஒன்றை உருவாக்குகிக் கொண்டு இருந்தார், ஆனால் அப்போதுதான் இந்த வீடியோவில் அதிர வைக்கும் காட்சி ஒன்றை பதிவாகிறது, அதைக் கண்டு அந்த நபர் ஆச்சரியமடைந்தார். உண்மையில், சாலையோரத்தில் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, ​​​​திடீரென அந்தப் பெண்ணின் கால்கள் உறைந்து நின்றுவிடுகிறது. அந்த பெண் ஒரு சில நொடிகளில் ஒரு கல் போல் எங்கும் அசையாமல் நிற்பதை நாம் வீடியோ காணலாம். லேசான காற்று வீசியது, இருப்பினும் அவரது தலைமுடி அசையவில்லை, உடைகள் அசையவில்லை. காணொளியை பாருங்கள்...


மேலும் படிக்க | 6 அடி நீள பாம்பை பிடித்து இழுத்து வரும் குட்டிப் பெண்... நடுங்க வைக்கும் வீடியோ!


டைம் டிராவல் செய்த பெண்ணின் வீடியோவை இங்கே காணுங்கள்:



அந்த பெண் சில நொடிகள் சிலை போல் நிற்க, பின்னால் நின்றவர் இந்த முழு காட்சியையும் தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென்று பழையபடி எல்லாம் சாதாரணமாகிவிடுகிறது. அந்தப் பெண்ணும் பழையபடி நடக்கத் தொடங்குகிறாள். இப்போது இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த வீடியோவைக் கண்ட மக்கள் அந்தப் பெண் டைம் டிராவல் செய்திருக்கிறார் என்று தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இது குறித்து பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


இந்த வீடியோவைப் பகிர்ந்த நபர், "இந்த பெண்ணின் ஆடைகளோ, அல்லது அவளுடைய தலைமுடியோ அசையவில்லை... எல்லாம் அந்தப் பெண்ணுடன் முற்றிலும் நின்றுவிட்டன என்று கூறியுள்ளார்.


முன்னதாக இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் வயதான தோற்றம் உடைய ஒருவர் பார்ப்பதற்கு தோனி போன்று இருக்கும் ஒரு நபரின் வீடியோ வெளியாகி வைரலானது. இதை மக்கள் டைம் டிராவல் உண்மை தான் போல என்றும், 2040-ல் இருந்து மகளுடன் சென்னை போட்டியை பாக்க வந்துள்ளார் தோனி என்றும் கூறியிருந்தனர்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஒரே நொடியில் பறவையை பதம் பார்த்த பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ