ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் நபரின் காலணி..வீடியோ வைரல்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ராட்சத மலைப்பாப்பின் வயிற்றில் இருந்து மனிதரின் காலணி சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட பழைய சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 8, 2023, 04:42 PM IST
  • இன்றைய வைரல் வீடியோ.
  • மலைப்பாம்பு மற்றும் நபரின் வைரல் வீடியோ.
ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் நபரின் காலணி..வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வத்தை காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வருகின்றது, ஆனால் இந்த வீடியோ பார்பதற்கு செம கொமெடியாக இருக்கும்.

மேலும் படிக்க | கண்ணாடி பார்த்து கன்பியூஸ் ஆன குரங்கு: குலுங்கி குலுங்கி சிரிப்பீங்க, வைரல் வீடியோ

இந்த நிலையில் இந்த வீடியோ ஆஸ்திரேலியாவின் சிட்னியில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு வீடியோவாகும். அங்கு உள்ள கிரீன் கிராஸ் ஜின்டாலே கால்நடை மருத்துவமனைக்கு ராட்சத மலைப்பாம்பு ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்த மலைப்பாம்பு காலணியை விழுங்கி ஜீரனிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தது. காட்டில் தவித்துக்கொண்டே அந்த பாம்பை, பாம்பு பிடிப்பவர் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவ கண்கானிப்பில் கொண்டு செல்லப்பட்ட அந்த ராட்சத பாம்பினை பரிசோதிக்கையில் அது மனிதரின் செருப்பினை விழுங்கியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பாம்பிற்க அருவை சிகிச்சை மேற்கொண்டு காலணியை அகற்றப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

காலணி விழுங்கி அவதிப்பட்ட மலைப்பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்: 

மலைப்பாம்பின் இந்த ஆபத்தான வீடியோ சமூக ஊடகங்களின் வெவ்வேறு தளங்களில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான N&S Snake Catcher Ipswich, Brisbane and Logan என்கிற யூடியூப் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நாய்க்காக சிறுவன் செய்த வேலை: ‘அந்த பையன் காவாலா’..நெகிழும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News