வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது மீண்டும் காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது, அதில் முதலை தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் சிங்கக் கூட்டத்தின் நடுவில் சிக்கிக் கொள்வதைக் காணலாம். 


மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 


முதலை மீது சிங்கங்கள் தாக்குதல்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றின் வெளியே சிங்கங்களின் அணி ஒன்று வெளிவருவதைக் காணலாம். சில நொடிகளுக்குப் பிறகு, அங்குள்ள தண்ணீரில் இருந்து ஒரு முதலை வெளியானதையும் காணலாம். ஆனால் பின்னர் சிங்கங்களின் அணி அந்த முதலையை அட்டாக் செய்ய தொடங்குகிறது. அனைத்து சிங்கங்களும் ஒன்று சேர்ந்து முதலையை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துகொள்வதைப் பார்க்கலாம். இதையொட்டி, அனைத்து சிங்கங்களும் பின்னர் சேர்ந்து முதலையைத் தாக்கத் தொடங்கினர்.


வீடியோவை இங்கே பார்க்கவும்



சிங்கம் மற்றும் முதலை தொடர்பான இந்த வீடியோ வனவிலங்கு @wildlifeculture1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்களும் நிறைய ரியாக்ஷன்களைப் பெற்று வருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ