Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ!

குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 30, 2022, 03:03 PM IST
  • விலங்குகளின் குறும்புகள் சமூக வலைதளங்களில் மிகவும் ரசித்து பார்க்கப்படுகின்றன.
  • குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான்.
  • சில வீடியோக்கள் காண்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கின்றன.
Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! title=

யானைகள் குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்கமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 

குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. அந்த வகையில், சிறு குழந்தையைப் போல் அடம் பிடிக்கும் யானை ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வனப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. அதில் குட்டி யானை குழந்தை அடம் பிடிப்பது போல் சாலையில் உருண்டு புரண்டு அடம் பிடிக்கிறது.

மேலும் படிக்க | தும்பிக்கை அரண் அமைத்து குட்டியை பாதுகாக்கும் யானைகளின் பாச வீடியோ வைரல்

வைரலாகும் குட்டி யானை வீடியோவை இங்கே காணலாம்:

 

 

வீடியோவில் குட்டி யானை ஒன்று அடம்பிடிப்பதை காணலாம், ஆனால் அதை சமாதானப்படுத்தும் எண்ணம் ஏதும் தாயிடம் இல்லை போலும். இந்த வீடியோவை IFS அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பின்வரும் தலைப்புடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 30.3k பார்வைகளையும் 1,270 லைக்குகளையும் பெற்றுள்ளது. குட்டி யானை மனிதக் குழந்தைகளைப் போலவே நடந்து கொள்வதைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் குட்டியானையின் குறும்பை மிகவும் ரசித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: யானையின் ‘Cat Walk’; இணையவாசிகளை சொக்க வைத்த ஒய்யார நடை!

மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News