வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பெரும்பாலும் சிங்கம், சிறுத்தை, யானை, முதலை தொடர்பான வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுகின்றன. இந்த வீடியோக்களில் சில முற்றிலும் அதிர்ச்சியளிக்கின்றன. நம்மால் நம்ப முடியாத பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். தற்போது அதிர்ச்சியை அளிக்கும் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு அதிசயமான காட்சி காணப்படுகிறது. இந்த வீடியோ முதலை மற்றும் ஆமையினுடையது.


பொதுவாக முதலை மிகவும் ஆக்கிரோஷமான மிருகமாக கருதப்படுகின்றது. அதன் பிடியில் சிக்கினால் யாராலும் மீள முடியாது. ஆனால், ஆமையின் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இருப்பதால், அவை எளிதாக இரையாகி விடுகின்றன. ஆனால், இந்த வீடியோவில் மிகவும் மாறுபட்ட ஒரு காட்சியை காண்கிறோம். முதலை ஆமையைப் பிடிப்பதையும், ஆனால் அதை வேட்டையாட முடியாமல் அவஸ்தைப் படுவதையும் இந்த வீடியோவில் காண்கிறோம். 


மேலும் படிக்க | எச்சில் பழத்தையா கொடுக்கிற... இந்தா வாங்கிக்கோ..; ஆட்டு குட்டியின் சேட்டை


எளிதில் தப்பிய ஆமை


வைரலாகி வரும் இந்த வீடியோவில், தண்ணீரில் இருந்து முதலை வெளியே வந்து ஆமைக்கு அருகில் வருவதை காண்கிறோம். முதலை ஆமையை வேட்டையாட விரும்புகிறது. முதலை ஆமியைஅ பிடித்துவிடுகிறது. முதலை தனது வாயில் ஆமையை பிடித்து, அதை கடித்து உள்ளே தள்ள முயற்சிக்கிறது. 


ஆனால், அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. முதலை ஆமையை கடிக்க பல முயற்சிகளை எடுத்த போதிலும், அதனால் அப்படி செய்ய முடியவில்லை. ஆமையின் உடலில் அதற்கு பாதுகாப்பாக இருக்கும் ஓட்டின் காரணமாக, முதலையால் அதை எளிதாக கடிக்க முடியவில்லை. முதலை அதை கடிக்க முயற்சிக்கும்போதெல்லாம், ஆமை தனது தலையை கூட்டுக்குள் இழுத்துக்கொண்டு விடுகிறது. ஆமை தனது புத்திசாலித்தனைத்தை பயன்படுத்தி, கடிபடாமல் தப்பித்து, இறுதியில் நாசூக்காக முதலையின் வாயிலிருந்து கீழே இழுந்து விடுகிறது.


முதலையை ஏமாற்றிய ஆமையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



கடினமான மேற்பரப்பு காரணமாக, ஆமை முதலையின் பிடியில் இருந்து எளிதாக தப்பித்து விடுகிறது. தப்பித்த ஆமை, எதுவும் நடக்காதது போல, அசால்டாக அங்கிருந்து எந்த பதற்றமும் இல்லாமல் சென்றுவிடுகிறது. ஏமாந்த முதலையோ குழம்பிப்போய், அந்த இடத்திலேயே இருக்கிறது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ oceanlife.4u என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், புத்திசாலித்தனத்துக்கு முன்னால் தோற்றுதான் ஆக வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். 


மேலும் படிக்க | நாட்டு சரக்கை குடித்து விட்டு மட்டையான யானைகள்... படாத பாடுபட்டு எழுப்பிய வனத்துறையினர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ