எச்சில் பழத்தையா கொடுக்கிற... இந்தா வாங்கிக்கோ..; ஆட்டு குட்டியின் சேட்டை

எச்சில் பழத்தை கொடுத்த பெண் மீது ஆட்டுக்குட்டி எச்சில் துப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 9, 2022, 06:52 PM IST
எச்சில் பழத்தையா கொடுக்கிற... இந்தா வாங்கிக்கோ..; ஆட்டு குட்டியின் சேட்டை title=

வனவிலங்கு பூங்காவுக்கு சென்ற பெண்கள் அங்கிருக்கும் வித்தியாசமான ஆட்டுக்குட்டிகளுக்கு உணவு கொடுக்கின்றனர். தாங்கள் கொண்டு வந்த பழத்தை அவைகளுக்கு கொடுக்க முற்படும் அவர்கள், கையில் இருந்த பழத்தை கடித்து அவற்றுக்கு கொடுக்கின்றனர். இதனை கம்பி வேலிக்குள் இருந்து கொண்டு உணவை வாங்க வரும் ஆடுகள், அந்த பெண்கள் கடித்து எச்சிலுடன் கொடுக்கும் பழத்தை சாப்பிட மறுக்கின்றன.

மேலும் படிக்க | சேவலை வம்பிழுத்ததால் வந்த சேதாரம்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

அந்த பெண்களுக்கு ஆச்சரியம். என்னடா சாப்பிட கொடுத்த பழத்தை,  ஆடுகள் சாப்பிட மறுகிறதே என யோசிப்பதற்குள், கம்பிவேலிக்குள் இருந்த ஆடுகள் எச்சிலை அந்த பெண்கள் உமிழ்ந்துவிடுகின்றன. இதனால் செம ஷாக்கான பெண்கள், முகத்தில் பட்ட ஆட்டுக்குட்டிகளின் எச்சிலை துடைத்துக் கொண்டு மீண்டும் ஆடுகள் பழத்தை சாப்பிடுவதற்கு கொடுக்கின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், எச்சில் பழத்தை எப்படி ஆடுகள் சாப்பிடும்?. அதனால் தான் அவை உங்கள் முகத்தின் மீது காரி உமிழ்ந்துவிட்டன என கிண்டலடித்துள்ளனர். அவர்களின் கிண்டல் ஒருபுறம் இருந்தாலும், ஆட்டுக்குட்டிகளுக்கு பழம் கொடுக்க நினைத்த பெண்களின் குணத்தை பாராட்டலாம். எச்சில் முகத்தின் மீது பட்டபிறகும்கூட அவர்கள் பழத்தை கொடுக்க முயல்வது பெண்களின் குணாதிசயத்தை காட்டுகிறது என இன்னும் சில நெட்டிசன்கள் பாராட்டு பத்திரமும் வழங்கியுள்ளனர். 

மேலும் படிக்க | குரங்கை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு: கிடுகிடிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News