வயித்துக்குள்ள எத்தனை பூனை இருக்குனு பார்ப்போமா.. அம்மா பூனையின் கியூட் வீடியோ!

கருவுற்ற பூனை ஒன்றின் வயித்திலுள்ள பூனைக்குட்டியின் நிலையை ஸ்கேன் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Nov 10, 2022, 08:13 AM IST
  • பூனைக்கு மருத்துவனையில் ஸ்கேன் செய்த மருத்துவர்.
  • பூனையும் அமைதியாக படுத்துக்கொண்டு பார்க்கிறது.
  • இணையத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
வயித்துக்குள்ள எத்தனை பூனை இருக்குனு பார்ப்போமா.. அம்மா பூனையின் கியூட் வீடியோ! title=

தாய்மை என்னும் நிலை ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய அற்புதமான வரம், இந்த வரத்திற்காக தவம் இருப்பவர்களும் பலர் இருக்கின்றனர்.  பெண்கள் தாய்மை அடைந்தால் அவர்களை எப்படியெல்லாம் கவனிப்பார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான், ஆனால் விலங்குகள் தாய்மை அடைந்ததால் அதை எப்படியெல்லாம் கவனிப்பார்கள் என்பதை நாம் அவ்வளவாக பார்த்திருக்க மாட்டோம்.  ஆனால் இணையத்தில் பரவி வரும் வீடியோவில் தாய்மை அடைந்துள்ள பூனைக்கு மருத்துவமனையில் எவ்வளவு கவனமாக பரிசோதனை செய்கிறார்கள் என்பதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.  இப்பொழுது தான் சில இடங்களில் கருவுற்று இருக்கும் நாய், பூனை போன்றவற்றிற்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன, தற்போது இந்த நிகழ்வு ட்ரெண்டாகியும் வருகிறது.

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

பல இடங்களில் மக்கள் தங்களது கருவுற்ற நாய் அல்லது பூனைக்கு வளைகாப்பு நடத்தி கவனம் ஈர்த்து வருகின்றனர்.  இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு மருத்துவமனையில் கருவுற்ற பூனை ஒன்று பெட்டில் படுக்கவைக்கப்பட்டு இருக்கிறது, அதனருகில் இரண்டு நபர்கள் இருக்கின்றனர்.  அப்போது ஒரு பெண் பூனையின் வயிற்றில் ஒரு திரவத்தை தடவி, வயிற்றை ஸ்கேன் செய்யும் கருவியை கொண்டு பூனையின் வயிற்றை ஸ்கேன் செய்கிறார்.  அருகிலுள்ள மானிட்டரில் பூனையின் வயிற்றில் உள்ள குட்டியின் நிலை குறித்து தென்படுகிறது.  இந்த வீடியோவானது டிவிட்டரில் Animalesybichos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.

 

இதுவரை கருவுற்ற தாய்மார்களுக்கு இதுபோன்று மருத்துவமனையில் ஸ்கேன் செய்திருப்பதை பார்த்த நமக்கு முதன்முறையாக பூனையின் வயிற்றை ஸ்கேன் செய்வதை பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.  அயல்நாடுகளில் விலங்குகளை இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பராமரிக்கின்றனர்.   இந்த வீடியோ பல பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News