ஏய் நான் எவ்வளவு அழகு தெரியுமா: க்ளோஸப் போஸ் கொடுக்கும் சிறுத்தை
கேமராவை சோதனை செய்யும் சிறுத்தை! சிறுத்தைப்புலி இல்லை என்று சொன்னால், நான் இருக்கிறேன் என்று அட்டெண்டன்ஸ் போட்ட சிறுத்தை
இன்று உலகமே இணையத்தினால் இணைந்திருக்கிரது. இணைய உலகில், பகிரப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ஆச்சரியத்தையும் திகைப்பையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் பல வைரலாகிறது. அதில் விலங்குகளின் வித்தியாசமான வீடியோக்கள் விரைவில் வைரலாகின்றன.
இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள நம்மை சில சமயம் சிரிக்க வைத்தால், பல சமயங்களில் சிந்திக்க வைக்கின்றன. சில உண்மைகளை புரிய வைக்கவும் இந்த வீடியோக்கள் உதவுகின்றன.
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள், கண்காணிப்பு காணொளிகளாகவும் இருக்கின்றன.
வன விலங்குகள் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரலாகின்றன.
மேலும் படிக்க | முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; பதற வைக்கும் காட்சி
நீரிலும் நிலத்திலும் திறமையாக வேட்டையாடும் திறன் பெற்ற சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அறிய, காட்டுக்குள் வனத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே கேமராக்களை வைப்பது வழக்கம்.
அதில் பதிவாகியுள்ள ஒரு வீடியோவில், சிறுத்தை ஒன்று கேமராவுக்கு முன்னே வந்து நின்று போஸ் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வளவு நெருக்கமாக சிறுத்தையை யாருமே பார்த்திருக்க முடியாது. சிறுத்தையின் கண்கள், உடலில் உள்ள புள்ளிகள், சருமத்தின் வகை என இந்த வீடியோவில் சிறுத்தை மிகவும் தெளிவாக பதிவாகியிருக்கிறது.
உண்மையில், இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், கண்காணிப்புக்காக பல நாட்களாக கேமரா புதருக்குள் வைக்கப்பட்டிருந்தது.
கேமராவை அகற்றிவிடலாமா என்று வனத்துறையினர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சிறுத்தை வந்து தனது இருப்பை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.