Viral Video: முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; மன பதற வைக்கும் காட்சி

முதலைகள்  நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2022, 04:32 PM IST
Viral Video: முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; மன பதற வைக்கும் காட்சி title=

பொதுவாக இணைய தளத்தில், காட்டு விலங்குகள் தொடர்பான காணொளிகள் பதிவிடப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

இணைய தளத்தில் பகிரப்படும் வீடியோக்களில், சில நேரங்களில் இரண்டு விலங்குகள் பரஸ்பரம் அன்பைப் பொழிவதைக் காணலாம். சில சமயங்களில் பரஸ்பரம் உக்கிரமாக சண்டையிடுவதைக் காணலாம். பெரும்பாலும் சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் மற்ற விலங்குகளைத் தாக்குவதைக் காணலாம். முதலைகளும் சற்றும் சளைத்தவை அல்ல. 

முதலைகள்  நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம். தற்போது மீண்டும் முதலையின் தாக்குதல் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வரிக்குதிரை கூட்டத்தை முதலை தாக்கும் காட்சி மனதை பதற வைக்கும். சமூகவலைத்தளங்களில் மிகவும் வரைலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வரிக்குதிரை கூட்டம் ஒன்று தண்ணீர் குடிக்க ஆற்றங்கரைக்கு வருவதைக் காணலாம். அனைத்து வரிக்குதிரைகளும் தாகத்தைத் தணிக்க முயன்றபோது, ​​அங்கு ஒரு முதலை வந்து ஆக்கிரோஷமாக தாக்கியது. மேலும் ஒரு வரிக்குதிரையின் காலையும் பிடித்து விட்டது. முதலையை பார்த்ததும் வரிக்குதிரைகள் கூட்டம்  உஷாராகி விட்டது. எல்லா வரிக்குதிரைகளும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தன. அதிர்ஷ்டவசமாக, வரிக்குதிரை கூட்டத்தில் முதலையிடம் சிக்கிய அந்த வரிக்குதிரையும் தப்பியது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கித் திணறும் கன்றுக் குட்டியின் அலறல்; பதற வைக்கும் காட்சிகள்

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

ஆபத்தான காட்சி

வரிக்குதிரையை முதலை தாக்கிய விதத்தை பார்க்கும் போது, வரிக்குதிரை கதை அதோகதி தான் என எண்ணத் தோன்றும். Wildlife_stories என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News