வைரல் வீடியோ: இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 
சோகத்தை மறந்து சிரிக்க வைக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. தற்போதும் அது போன்ற, வேடிக்கையான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மந்தமான அல்லது சோர்வான மனநிலையில் நீங்கள் இருந்தால், கண்டிப்பாக இந்த வீடியோ உங்களை உற்சாகப்பப்டுத்தும். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ காண்பவர்களை கவர்ந்துவிடும் ஆற்றல் படைத்தது. கடந்த ஆண்டு இந்த வீடியோ வைரல் ஆனது. இது ஒரு ஆட்டுக்குட்டி மற்றும் அதன் நண்பனான குட்டி குரங்கு பற்றியது. இந்த வீடியோ தற்போது மீண்டும் ட்விட்டரில் வெளிவந்துள்ளது. 


வீடியோவில், ஒருவர் கைநிறைய பெர்ரிகளுடன் ஆட்டை அழைப்பதைக் காண முடிகின்றது. அவரது அழைப்பைக் கேட்டு, ஆடு புதர்களுக்கு மத்தியில் இருந்து வெளிப்பட்டு அந்த நபரை நோக்கி ஓடி வருகிறது. அது கேமராவின் அருகில் வரும்போதுதான் அதன் கழுத்தில் ஒரு குட்டி குரங்கு ஒட்டிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது.


ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றாக பெர்ரிகளை சாப்பிடத் தொடங்குகிறது. சில வினாடிகளுக்குப் பிறகு, குட்டி குரங்கும் ஆட்டுடன் சேர்ந்து பெர்ரிகளை சாப்பிடத் தொடங்குகிறது. அதன் பிறகு, வீடியோவில் ஒரு மிக அழகான காட்சியை காண முடிகின்றது. குரங்கு ஆட்டின் முதுகில் சுகமாக அமர்ந்து சாவகாசமான பழங்களை ருசிக்கிறது.


மேலும் படிக்க | கன்னாபின்னானு காதல் செய்யும் பாம்புகள்: இணையத்தை கலக்கும் 'ஸ்னேக் லவ்' 


கண்களை அகற்ற முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்:



‘அனிமல்ஸ் ஹோம்’ என்ற யூடியூப் சேனலில் முதலில் புய் மின் தான் இந்த வீடியோவைப் பகிர்ந்தார். இந்த வீடியோ வியாழன் அன்று Buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் மறுபகிர்வு செய்யப்பட்டது. இந்த வீடியோ ட்விட்டரில் கிட்டத்தட்ட 4,10,000 வியூஸ்களையும் 22,300 லைக்குகளையும் பெற்றுள்ளது. இது 3,442 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.


இணையவாசிகள் இரு விலங்குகள் மீதும் பாசத்தை பொழிந்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு பயனர், “இந்த ஜோடியை நாம் தொந்தரவு செய்யாமல், அவை செய்யும் சிறிய சாகசங்களை பார்க்க வெண்டும் என்று விரும்புகிறேன். அவர்களது விளையாட்டு, தூக்கம், அனைத்தையும் பார்க்க வேண்டும். மிக அழகான வீடியோ" என்று எழுதியுள்ளார். 


மற்றொரு பயனர், “ஓஎம்ஜி! நான் குரங்கை கவனிக்கவே இல்லை!!" என்று வியந்தார். "ஆமாம்.. குரங்கைப் பார்க்க எனக்கும் சில நொடிகள் ஆனது!!! எவ்வளவு அழகாக இருக்கிறது, ” என்று மற்றொருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 


இந்த வீடியோ முதலில், பிபி என்ற குரங்கின் வாழ்க்கையை படம் பிடிக்கும்  'Animals Home'என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் ஆட்டுக்குட்டிக்கும் குட்டி குரங்குக்கும் இடையிலான வலுவான நட்பையும் ஆழமான புரிதலையும் காண முடிகின்றது. இரண்டு விலங்குகளும் செர்ரிகளை சாப்பிடும் விதம் மிகவும் கியூட்டாக உள்ளது.  


மேலும் படிக்க | புலியின் வாயில் சிக்கிய குழந்தை; போராடிக் காத்த வீரத் தாய்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ