புலியின் வாயில் சிக்கிய குழந்தை; போராடிக் காத்த வீரத் தாய்!

மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் புலியின் வாயில் சிக்கிய தனது 15 மாத மகனைக் காப்பாற்றி அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 8, 2022, 01:59 PM IST
  • புலியின் வாயில் சிக்கிய தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய உண்மைக் கதை.
  • காட்டுக்குள் ஓடிய புலியை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
  • உமாரியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தாயும் சேயும்.
புலியின் வாயில் சிக்கிய குழந்தை; போராடிக் காத்த வீரத் தாய்! title=

தனது குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால், உயிரை துச்சமாக மதித்து காப்பவர்கள் தாய்குலங்கள். ஒரு தாயைப் போல ஒரு குழந்தையை யாராலும் பாதுகாக்க முடியாது. தன் உயிரைக் கொடுக்கவும், தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லவும் அவள் தயாராக இருக்கிறாள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் புலியின் வாயில் சிக்கிய தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய உண்மைக் கதை இது. ஞாயிற்றுக்கிழமை காலை, அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தனது மகன் ரவிராஜை வயலுக்கு அழைத்துச் சென்றபோது, ​​இந்த சம்பவம் நடந்தது. அப்போது, ​​புலி அவரைத் தாக்கி, தனது வாயில் கவ்விக் கொண்டது. அவர் தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது, ​​புலி தாயையும் தாக்கியது. ஆனால் தனது குழந்தையை காப்பாற்ற தொடர்ந்து போராடினாள்.

பின்னர், அவளது கூக்குரல் கேட்டு, சில கிராமவாசிகள் அங்கு வந்தனர். இதையடுத்து, குழந்தையை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடிய புலியை கிராம மக்கள் விரட்டியடித்தனர். சவுத்ரியின் கணவர் போலா பிரசாத், அவரது மனைவிக்கு இடுப்பு, கை மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் மகனுக்கு தலை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | Viral Video: குஞ்சுகளை காக்க ராஜ நாகத்துடன் கோழி நடத்தும் யுத்தம்!

புலியின் தாக்குதலுக்குப் பிறகு, அந்தப் பெண்ணும் அவரது மகனும் உடனடியாக மன்பூரில் உள்ள சுகாதார மையத்திற்கும், பின்னர் உமாரியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று வனத்துறை அதிகாரி ராம் சிங் மார்கோ கூறினார். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், வனத்துறை குழுவும் குழந்தை மற்றும் அவரது தாயை தாக்கிய புலியை கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

உமாரியா கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, மாவட்ட மருத்துவமனையில் பெண் மற்றும் அவரது மகனை சந்தித்தார். புலியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரும் ஜபல்பூரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்றார். வனப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News