வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளில் நாய்கள் மனிதர்களின் நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. இவை மனிதர்களைப் போலவே செயல்படும். மேலும் இவை மனிதர்களின் வார்த்தைகளையும் அவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் ஒரு விலங்கு என்று கூறப்படுகிறது. ஆகையால் நாய்கள் மனிதர்களுக்கு மிக நெருக்கமான விலங்குகளில் ஒன்றாக உள்ளன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன. 


சமீபத்திலும் ஒரு நாய் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பலரால் மிகவும் விரும்பப்படுகிறது. அதில் ஒரு நாய் அதன் உரிமையாளர் வாசிக்கும் இசைக்கு ஏற்ப நடனமாடுவதைக் காண முடிகின்றது. 


மேலும் படிக்க | டிவேலு- கவுண்டமணி காமெடி செய்யும் கல்யாண ஜோடி! நகைச்சுவையில் பின்னியெடுக்கும் மாப்ளே 


இது நாயா அல்லது இசைக்கலைஞரா


10 வினாடிகள் கொண்ட இந்த  வீடியோ-வை @buitengibeiden என்ற பக்கம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில், இந்த நாயின் அழகான செயலைக் கண்டு அனைவரும் வியப்படைகிறார்கள். இந்த வீடியோவில், இந்த நாயின் உரிமையாளர் பியானோவில் ஒரு டியூனை வாசிப்பதைக் காண முடிகின்றது. அதைக் கேட்டு நாய் இந்த இசையின் ஒவ்வொரு ட்யூனையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தன் வால் முதல் உடல் முழுவதையும் ஆட்டுகிறது. 


அசத்தலான நாயின் நடனத்தை இங்கே காணலாம்:



நாய் இசையின் மொழியைப் புரிந்துகொள்கிறது


இந்த நாயின் வேடிக்கை வீடியோ ட்விட்டரில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை 1.8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


‘இசை ஒரு உலகளாவிய மொழி... அதை இந்த நாய் நிரூபித்து விட்டது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு நபர், ‘எனக்கும் இப்படி ஒரு நாய் என் செல்லப்பிராணியாக வேண்டும்’ என எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | Viral Video: பூச்சிக்களை கபளீகரம் செய்யும் இரு தலை பல்லி! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ