வடிவேலு- கவுண்டமணி காமெடி செய்யும் கல்யாண ஜோடி! நகைச்சுவையில் பின்னியெடுக்கும் மாப்ளே

Can't Control Laugh Viral Video: தம்பி வெளிய போகத! கருத்துப்போயிடுவ! என கலாய்க்கும் திருமண கலாட்டா வீடியோ வைரல்! வடிவேலுவின் தங்கையை மணக்கும் கவுண்டமணியின் ரியாக்‌ஷன் கூட வேஸ்ட்! பின்னி பெடலெடுக்கும் மாப்ள சார் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 22, 2023, 05:13 PM IST
  • மாப்பிள்ளைக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க!
  • டிரெண்டாகும் கலாட்டா கல்யாணம்
  • திருமண சடங்கில் கலாட்டா வீடியோ வைரல்
வடிவேலு- கவுண்டமணி காமெடி செய்யும் கல்யாண ஜோடி! நகைச்சுவையில் பின்னியெடுக்கும் மாப்ளே title=

Bride At Marriage Viral Video: திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும், குடும்பத்திலும், மத ரீதியாகவும், சடங்கு ரீதியாகவும் திருமணம் நடைபெறும் முறைகள் மாறலாம். ஆனால், திருமணம் என்பது ஒரு நேர்மறையான விஷயம் என்பதும், அது கொண்டாட்டத்திற்கான மனோபாவத்தைக் கொடுக்கிறது என்பதையும் மறுத்துவிட முடியாது.

நேர்த்தியான ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களையும் பார்க்கிறோம். அதேபோல, திடீரென நடைபெறும் திருமணங்களையும் பார்க்கிறோம். பெண் பார்க்கும் படலமோ, மாப்பிள்ளை யார் என்று தெரியாமலேயே மாலையிட்ட மங்கைகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நடக்கும் திருமணம், எதிர்கால வாழ்க்கைக்கான அச்சாணி என்பதால், திருமணம் என்றாலே, அது நன்றாக நடைபெற வேண்டும் என்பதும் அனைவரின் விருப்பமாக இருக்குகிறது..

அதிலும், இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதமான விஷயமாக பார்க்கப்படுகிறது. குழந்தை பிறந்ததில் இருந்தே, அதற்கான திருமணத்தைப் பற்றி கற்பனை செய்து, அதற்காக நிதி சேர்க்கும் வழக்கம் கொண்ட இந்திய கலாச்சாரத்தை சேர்ந்த இந்தியர்களின் திருமணம் வித்தியாசமானது.

மேலும் படிக்க | நடுரோட்டில் இப்படியா ஆடுறது? ஆண்டிகளின் அக்கப்போர்: வீடியோ வைரல்

வித்தியாசமான திருமண வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால், உடனே  அவை வைரலாகின்றன. அப்படியொரு திருமணம் இது. இந்த வீடியோவை பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். நீங்களும் பார்த்து சிரித்து மகிழுங்கள்.

திருமணம் முடிந்த பிறகு, மணமக்களுக்கு பல விளையாட்டுகளை காட்டும் சடங்குகள் நம் பாரம்பரியத்தில் உண்டு. அதிலும், பெண் மாப்பிள்ளையை கிண்டல் செய்யும் வழக்கம், ஜாலியான் நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வீடியோ எபப்டி இருந்தது?

பொதுவாக பெண்கள், மணமகளாய் இருக்கும்போது தலை குனிந்து, முகம் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற காலம் மாறிவிட்டது. இந்த வீடியோவில், மணமக்னின் முகம் மறைந்திருக்கிறது.

மணப்பெண், சஸ்பென்சாக மணமகனின் முகத்தை காட்டும்போது, கவுண்டமணி - வடிவேலு காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த வீடியோவைப் பார்த்தால், சிரிப்பை நிறுத்துவது கடினம். இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்ற மணமகன் வீடியோவாக மாறிவிட்டது.

மேலும் படிக்க | மேடையிலேயே இப்படி ஆனா எப்படி? புதுமண ஜோடியின் வைரல் வீடியோ

 மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் மணமகன்
திருமணம் தொடர்பான அனைத்து சடங்குகளும் முடிந்துவிட்ட நிலையில், வீட்டிற்கு செல்வதற்கு முன் ஆரத்தி எடுக்கும் நேரத்தில் நடைபெறும் இந்த குறும்பு, மணமகனைப் பார்த்தும், கவுண்டமணி அடைந்த ஷாக்கை அனைவரும் அடைகின்றனர். ஆனால், மணமகனோ ஜாலியாக பேசுகிறார்.

வட இந்திய திருமணத்தில் நிகழும் இந்த காமெடி வீடியோவில் மணமகன் நடந்துக் கொள்வதையும், மணமகளின் ரியாக்‌ஷனையும் பார்க்கும்போது, மணமகனுக்கு கறுப்பு மேக்கப் போட்டிருக்கலாம் என தோன்றுகிறது. உங்கள் அபிப்ராயம் எனன்?  

திருமண நாளில் நடைபெறும் இந்த ஆரத்திக்கு காத்துக் கொண்டிருக்கும் மணமக்களின் வீடியோ தற்போது வைரலாகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது, 1 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த வீடியோவிற்கு பலரும் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: பூச்சிக்களை கபளீகரம் செய்யும் இரு தலை பல்லி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News