பல இசையமைப்பாளர்களின் பாடல்கள் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து சமீபத்தில் கச்சா பாதம் என்னும் பாடல் வைரல் ஆனது.  இணையத்தில் திரும்பும் இடம் எல்லாம் இந்த பாடல் ஒலித்தது. குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் வைரல் ஆனா இவர் சில மியூசிக் வீடியோக்களிலும் காணப்பட்டார். 
சமீபத்தில் இவரை ஒரு யூடியூப் நிறுவனம் பேட்டி எடுத்து இருந்தது.  அதில் அவர் தனக்கு இன்னும் சரியான ஊதியம் வரவில்லை என கூறியுள்ளார்.  மேலும் அவர் டாடா ஹாரியரில் வளம் வரும் காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | லேட்டா வந்த மாப்பிள்ளை, டென்ஷன் ஆன மணப்பெண்: போர்க்களமான மணமேடை


டாடா ஹாரியர் காரில் புவன் பத்யாகர் தனது கிராமத்தை சுற்றி வந்தார். இவர் சமீபத்தில் தனது சொந்த காரில் செல்லும் போது விபத்தில் சிக்கினார்.  பத்யாகர் சமீபத்தில் ஹூண்டாய் காரை செகண்ட் ஹெண்டில் வாங்கி இருந்தார்.  காரில் சென்று கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் மோதியது.  இதில் மார்புப் பகுதியில் புவன் பத்யாகருக்கு காயங்கள் ஏற்பட்டது.  பின்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



பிர்பூம் மாவட்டத்தின் லக்ஷ்மிநாராயண்பூர் பஞ்சாயத்தில் உள்ள குரல்ஜூரி கிராமத்தில் வசிக்கும் புவன் பத்யாகர் தெரு ஓரத்தில் கடலை விற்று நாள் ஒன்றுக்கு ரூ.300 சம்பாதித்து வந்தார். அவரது வாடிக்கையாளர் ஒருவர் வேர்க்கடலை விற்கும் போது ‘கச்சா பாதாம்’ பாடும் வீடியோவை படமாக்கி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை அடுத்து இந்த பாடல் இணையத்தில் மிகவும் வைரலானது. அவர் தனது பாடலை ரீமிக்ஸ் செய்த இசை நிறுவனத்திடம் இருந்து ரூ.3 லட்சம் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. புவன் ஒரு அரசியல் கட்சியில் இணைக்கப்பட்டு அரசியல் பேரணிகளில் நேரடி நிகழ்ச்சிகளை வழங்குகிறார்.  பாடல் வைரல் ஆனா பிறகு தனது சைக்கிளில் இருந்து 100சிசி பைக்கிற்கு மாறிய இவர், பின்னர் செகண்ட் ஹேண்ட் ஹூண்டாய் 10 வாங்கினார். 



மேலும் படிக்க | ’மகா நடிகன்’ நாயை ஏமாற்றும் வாத்து - வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR