புனேவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் ODI போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிளம்பிவிட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா அகமதாபாத் விமான நிலையத்தில் விராட் கோலியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 23, செவ்வாய்க்கிழமை தொடங்கி இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவிருக்கிறது.அதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் விராட் கோலி தனது மனைவி மற்றும் மகளின் அனைத்து பொருட்களையும் வைத்திருந்தார். அதில் சாமான்கள், கைப்பைகள், அவரது கிரிக்கெட் கிட் மற்றும் அவரது மகளின் carrycot கூட இருந்தது. 


விராட் கோலியின் மனைவி அனுஷ்கா குழந்தையை சுமந்துகொண்டிருந்தார். கேப்டனின் குடும்பமும், இந்திய அணியும் கிளம்பியதை பார்க்க முடிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடர் மற்றும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நடைபெற்ற அகமதாபாத் நகரத்தில் இவர்கள் அனைவரும் ஒரு மாதம் தங்கியிருந்தனர்.  


Also Read | IND vs ENG: ஐசிசி இந்திய அணிக்கு அபராதம் விதித்தது.. காரணம் என்ன..!!!


ஜனவரி 11ஆம் தேதி கோலி-அனுஷ்கா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. அண்மையில் தான் குழந்தையின் இரண்டு மாத நிறைவு விழாவைக் கொண்டாடினர். 
  
டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி 20 ஐ தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா இங்கிலாந்துடன் மோதவுள்ளது. விராட் கோலி, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, தனது அணியை மட்டுமல்ல, குடும்பத்தையும் பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார் என்று இணையத்தில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் பங்கேற்ற பின்னர் விராட் கோலி, பிரசவத்தின்போது மனைவியுடன் இருப்பதற்காக தந்தைவழி விடுப்பு எடுத்திருந்தார். கோலி இல்லாத நிலையிலும், இந்தியா மூன்றில் இரண்டு போட்டிகளில் வென்று, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.


Also Read | கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR