வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருக்கு பயத்தை ஏற்படுத்த பாம்பு என்ற வார்த்தை போதும். அதை கேட்டாலே, நிஜமாகவே அங்கு பாம்பு இருக்கிறதா இல்லையா என்றுகூட பார்க்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடிப்பவர்கள்தான் இங்கு அதிகம். பாம்புகளும் சாதாரணமான விலங்கினங்கள் அல்ல. மக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் பாம்புகளுக்கே முதல் இடம். இணையத்தில் பாம்புகளின் பல வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையவாசிகளிடமும் பாம்பு குறித்த அதிக ஆர்வம் எப்போதும் இருக்கும். 


உங்கள் ஸ்குட்டர் அல்லது காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன், அதில் ஒரு நாகப்பாம்பு சுருண்டி இருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும்? இதன் விடையை இந்த வீடியோவில் காணலாம். ஆனால், உங்களுக்கு தோன்றும் விடைக்கு சற்று மாறாக இந்த வீடியோ இருக்கக்கூடும். 


பாம்பு மீட்கும் பணியை செய்பவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள், திறமையானவர்கள் மற்றும் பாம்புகளைப் பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் விடுவதற்குத் தகுதியானவர்கள். இருப்பினும், எந்த வித சிறப்பு பயிற்சியும் இல்லாமல், துணிச்சலாக பாம்புகளை கையாளும் நபர்களும் உள்ளனர். 


பொதுவாக, தொழிமுறையாக இதை செய்பவர்கள் பாம்புகளை பிடிக்க பாம்பு கொக்கி குச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பாம்புகள் காயமடையாமல் அவற்றை எளிதாகப் பிடிக்க முடிகின்றது. இருப்பினும், சமீபத்தில், ஒரு நபர் ஒரு ஸ்க்ரூடிரைவரைப் பயன்படுத்தி நாகப்பாம்பை மீட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது.


ஸ்கூட்டரின் முன் பகிதியில் நாகப்பாம்பு ஒன்று சுருண்டு இருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அப்போது அதை அகற்ற வரும் நபர் அதை மிக கவனமாக தொடுகிறார். அவர் பாம்பை கையில் பிடிக்க முயல்கிறார், ஆனால் அவரால் அது முடியவில்லை. பின்னர், அவர் ஸ்கூட்டரின் முன் மூக்கைத் திறக்க பயன்படும் ஸ்க்ரூடிரைவரைப் பயன்படுத்தி நாகப்பாம்பின் பிடியைத் தளர்த்த முயற்சிக்கிறார்.  


மேலும் படிக்க | மேலிருந்து கீழே விழுந்த குழந்தை, பாய்ந்த அம்மா: தப்பித்ததா குழந்தை? திக் திக் வைரல் வீடியோ


சில நிமிட முயற்சிக்குப் பிறகு, அவர் பிடியைத் தளர்த்துவதில் வெற்றி பெற்றார். பின்னர் நாகப்பாம்பை அதன் வாலால் இழுக்கிறார். ஆனால், நாகப்பாம்பு வாகனத்திற்குள் புகுந்து விடுகிறது.


சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபர் வாகனத்திலிருந்து பாம்பை காயமின்றி வெளியே எடுத்தார். அவர் லாவகமாக பாம்பை எடுத்த பாணி அனைவராலும் பாராட்டப்படுகின்றது. தனக்கு எந்த தீங்கும் நேராமல், பாம்பையும் காயப்படுத்தாமல் அவர் இந்த பணியை செய்து முடிக்கிறார்.


பாம்பை துணிச்சலாக கையாண்ட நபரின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ ட்விட்டரில் Pagan என்ற பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது. இதற்கு 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மேலும் ஸ்க்ரூடிரைவர் மற்றும் வெறும் கைகளால் நாகப்பாம்பை மீட்ட அச்சமற்ற மனிதனை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இந்த கலர் ல காக்கா பார்த்துருக்கீங்களா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ