இந்த கலர் ல காக்கா பார்த்துருக்கீங்களா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

White Crow Video Viral: இந்த காணொளியை பார்த்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலரின் கூற்றுப்படி, இது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கலாம், ஆனால் இது போன்ற வீடியோவை முதல் முறையாக பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 12, 2023, 11:47 AM IST
  • வெள்ளைக் காகத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
  • 10,000 காகங்களில் ஒரு காகம் மட்டுமே வெள்ளை நிறமாக இருக்கும்.
இந்த கலர் ல காக்கா பார்த்துருக்கீங்களா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வெள்ளைக் காகத்தின் வீடியோ: வெள்ளை நிறத்தில் இருக்கும் காகத்தை நீங்கள் இதுவரை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் அப்படியொரு வீடியோ இப்போது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. உலகில் இருக்கும் அத்தனை அதியசங்களையும், நிகழ்வுகளையும் யாராலும் பார்க்க இயலாது. ஒரு சில விஷயங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டவை மட்டுமே பெரும்பாலானோர் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது. அந்தவகையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் லுல்லா நகரில் உள்ள சாலையில் ஒரு வெள்ளை காகம் தென்பட்டுள்ளது. அதனை கண்டு வியப்பான சிலர் தங்களின் தொலைபேசியில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர்.

வெள்ளை காகத்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. மேலும் இது போன்று வெள்ளை காகம் தென்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கொடுங்கையூரில் வலம் வந்த வெள்ளை காகத்தின் வீடியோ இதேபோல வைரலானது. இப்போது வெளியான வீடியோவில் காணப்பட்ட வெள்ளை காகம் புனே சாலையோரத்தில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்ததுக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க | டீச்சரம்மாவின் நாய்னா சும்மாவா? படிச்சு அப்படியே செய்யும் நாயின் வைரல் வீடியோ

வெள்ளைக் காகத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்
இந்த காணொளியை பார்த்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலரின் கூற்றுப்படி, இது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கலாம், ஆனால் சிலருக்கோ இந்த காகத்தின் வீடியோ வியக்க வைத்தது. அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, புனேவில் உள்ள ஷிரூர் பகுதியில் இதுபோன்ற வெள்ளை நிற காகம் ஒன்று காணப்பட்டது. இது போன்ற வெள்ளை நிற காகம் மிகவும் அரிய வகை ஆகும். பறவை நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை காகங்கள் மிகவும் அரிதானவை. பொதுவாக காகத்தின் நிறம் கருப்பு, ஆனால் இந்த பறவையின் நிறம் வெள்ளையாக மாறியது, ஏனெனில் அது மரபணு கோளாறு காரணமாக இருக்கலாம். இந்தக் கோளாறால் காகத்தின் உடல் முழுவதும் வெண்மையாக மாறியது என்று கூறினர்.

இந்த அரிய பறவை அதன் தனித்துவமான நிறத்தால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பறவை நிபுணர்களின் கூற்றுப்படி, 10,000 காகங்களில் ஒரு காகம் மட்டுமே வெள்ளை நிறமாக இருக்கும். 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நடுரோட்டில் பேத்தி வயது பெண்ணுடன் ரொமான்ஸ்..வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News