டீச்சரம்மாவின் நாய்னா சும்மாவா? படிச்சு அப்படியே செய்யும் நாயின் வைரல் வீடியோ

Funny Dog Video: நில் என்றால் நிற்கும், உட்கார் என்றால் உட்காரும் நாயை பார்த்துள்ளீர்களா? அசத்தலான அந்த நாயை இந்த வீடியோவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 11, 2023, 05:51 PM IST
  • டீச்சரம்மாவின் வளர்ப்பு நாய்.
  • நாய்க்கு படிக்கத் தெரியுமா?
  • அதிசயவைக்கும் வைரல் வீடியோ.
டீச்சரம்மாவின் நாய்னா சும்மாவா? படிச்சு அப்படியே செய்யும் நாயின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகளில் நாய்கள் மனிதர்களின் நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. இவை மனிதர்களைப் போலவே செயல்படும். மேலும் இவை மனிதர்களின் வார்த்தைகளையும் அவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் ஒரு விலங்கு என்று கூறப்படுகிறது. ஆகையால் நாய்கள் மனிதர்களுக்கு மிக நெருக்கமான விலங்குகளில் ஒன்றாக உள்ளன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன. 

நாய்களை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் அவர்களது நாய்களுக்கு பல வித பழக்ககளை கற்றுக்கொடுப்பதுண்டு. நாய்கள் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்களை இவர்களில் பலர் இணையத்தில் பகிர்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஆசிரியை அப்படி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது வளர்ப்பு நாய் செய்யும் சிலவற்றை இந்த வீடியோவில் காண முடிகின்றது. சில கார்டுகளை பார்த்து அந்த நாய் அவற்றில் எழுதி இருப்பதை அப்படியே செய்கிறது.  

ஆசிரியையின் நாய் அவர் காட்டும் கார்டுகளில் உள்ள வார்த்தைகளை பார்த்து அப்படியே செய்வதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த நாய்க்கு படிக்கத் தெரியுமா என நமக்கு ஆச்சரியமே ஏற்படுகின்றது. ஆனால் இதன் விளக்கத்தையும் அந்த ஆசிரியையே அளிக்கிறார்.

"நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. என் செல்ல நாய் கார்டில் உள்ளவற்றை படித்து அதன்படி செய்யவில்லை. நான் கார்டுகளை காட்டும் பொசிஷன், அதாவது நிலையை வைத்துதான் நாய் அனைத்தையும் செய்கிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாய் வெவ்வேறு அட்டைகளைப் பார்த்து அதில் எழுதப்பட்டிருப்பதை அப்படியே செய்வதை வீடியோவில் காண்கிறோம். திரையில் ஒரு பெட்டியில், "ஆசிரியர் ஒரு நாயை தத்தெடுத்தால் என்ன நடக்கும்" என்று எழுதப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நடுரோட்டில் பேத்தி வயது பெண்ணுடன் ரொமான்ஸ்..வீடியோ வைரல்

நாயின் அட்டகாசமான வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@lunathetrickdog)

இந்த வீடியோ கடந்த மாதம் பகிரப்பட்டது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோவுக்கு  7.8 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்கள் கிடைத்துள்ளன. இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், இதற்கு 85,000 லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

'வாவ்..சூப்பரான வீடியோ' என ஒர் பயனர் எழுதியுள்ளார். 'இந்த சூப்பரான நாய்க்கு நீங்கள் மிக சூப்பரான பயிற்சியை அளித்துள்ளீர்கள்' என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | பறவையை கொன்று முழுசா விழுங்கிய 20 அடி மலைப்பாம்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News