நாகப்பாம்பின் வீடியோ வைரல்: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் நாகப்பாம்புகளின் பல வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போது இங்கு கிங் கோப்ரா இடம்பெறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அரச நாகப்பாம்புகள் பொதுவாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உறங்கும், அதைத் தொடர்ந்து டிசம்பர்-ஜனவரி மாதங்களில் உடல் உறவுப் பருவம் இருக்கும். இந்த விஷப் பாம்புகள் உறங்கும் இடம் மனிதர்களுக்கு அடிக்கடி ஆச்சரியமாக இருக்கிறது. அதன்படி கிங் கோப்ரா சமீபத்தில் ஒருவரின் ஸ்கூட்டருக்குள் உறங்கிக் கொண்டிருந்தது.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


இரு சக்கர வாகனத்தில் இருந்த கொடிய பாம்பை அப்புறப்படுத்த பயிற்சி பெற்ற பாம்பு மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், "ஸ்கூட்டர் நாகப்பாம்பு உறங்குவதற்கு ஏற்ற இடமாக மாறிவருகிறது என்றார்". இறுதியாக பயிற்சி பெற்ற மீட்புப் பணியாளர் அதைப் பத்திரமாக வெளியேற்றுகிறார். 


வீடியோவை இங்கே பார்க்கவும்



இந்த வீடியோ 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் 980 விருப்பங்களையும் பெற்றுள்ளது.


அந்த வீடியோவில், ஸ்கூட்டரில் இருந்து சிறிது தூரத்தில் மக்கள் நிற்கும் இடத்தில், பாம்பு மீட்பு வீரர் ஸ்கூட்டரின் முன் பகுதியை ஸ்க்ரூடிரைவர் மூலம் திறந்துள்ளார். மெதுவாகவும் கவனமாகவும் அந்த மனிதன் ஸ்கூட்டரில் இருந்து நாகப்பாம்பை வெளியே எடுக்க முயன்று அதை வெற்றிகரமாக வெளியே இழுக்கிறான். சுற்றி நின்றவர்கள் இந்த மீட்புப் பணியை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


 


மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ