வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகள் பொதுவாக தங்கள் வாழ்விடங்களில் தங்க விரும்புகின்றன. எனினும், மனிதர்கள் அவற்றின் வாழ்விடங்களையும் விட்டுவைக்கவில்லை. இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான தொடர்பு அதிகரித்து வருகிறது. இது சில சமயம் ஆபத்தாகி விடுகிறது. சுற்றுலாப் பயணிகள் ஜங்கிள் சஃபாரி செய்யும்போது, ​​ஆபத்தான மற்றும் அரிதாகவே காணக்கூடிய விலங்குகளைப் பார்க்கிறார்கள். இருப்பினும், அதே காடுகளில் இருந்து சில விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. இதனால் நெரிசல் ஏற்படுகிறது. இதைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி காணப்படுகின்றன.


அப்படி பகிரப்படும் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளன. சாம்பார் எனப்படும் காட்டு மான் ஒன்று டீக்கடைக்கு செல்வதையும், அப்போது அங்கிருந்தவர்கள் அதற்கு காலை உணவு கொடுப்பதையும் சமீபத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் காண முடிகின்றது. 


மேலும் படிக்க | சைட் டிஷ்ஷுடன் சரக்கடிக்கும் குரங்கு: நம்ப முடியாமல் வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


காட்டில் இருந்து வெளியே வந்த மான் திடீரென டீக்கடைக்கு வந்தது


இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி டாக்டர் சாம்ராட் கவுடா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சாம்பார் மான் ஒன்று தேநீர் கடையின் முன் நின்று கொண்டு அங்குள்ள உணவுப் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் கையில் பன் வைத்துக்கொண்டு தன் அருகில் வருமாறு அதற்கு செய்கை செய்கிறார். மானும் புரிந்துகொண்டு அந்த திசையில் நகர்கிறது. பின்னர் அவர் அதற்கு உணவளிக்கிறார். அதை மான் ரசித்து சாப்பிடுவதை வீடியோவில் காண முடிகின்றது. அவரது கையில் இருக்கும் உணவை மான் ஆசையாக சாப்பிடுகிறது. இதைப் பார்த்த சிலர் அதை நோக்கி வருகிறார்கள். 


ஐஎஃப்எஸ் அதிகாரி ட்விட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்



மற்றொரு நபர் தனது நண்பரிடம் மானுடன் தனது புகைப்படத்தை எடுக்கச் சொல்வதையும் இதில் காண முடிகின்றது. ஒருவர் மானுக்கு டீ கொடுக்கிறார். ஆனால், அதை உட்கொள்ள மான் மறுக்கிறது. விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவைப் பற்றி IFS அதிகாரி தனது கவலையை ட்வீடில் வெளிப்படுத்தியுள்ளார். இந்திய வன அதிகாரி டாக்டர் சாம்ராட் கவுடா தனது ட்வீட்டில், 'மான் உள்ளூர் டீக்கடைக்கு சென்றால், என்ன தருவார்கள்? உண்மையைச் சொன்னால், வனவிலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் வருவது நல்ல அறிகுறி அல்ல.' என கூறியுள்ளார். வீடியோ எடுக்கப்பட்ட இடத்தை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அது கேரளாவில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது.


இந்த வீடியோ வெகுவாக வைரல் ஆகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய டெஸ்லா கார்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ