’ஏலே ஒலிம்பிக் வச்சா நீ தாம்ல பர்ஸ்டு பிரைஸூ’ மானின் அட்டகாசமான லாங் ஜம்ப் வீடியோ வைரல்
ஒலிம்பிக்ல ஓடுனா தங்கப்பதக்கம் தான் கிடைக்கும், இங்க ஓடலனா உசுரு கூட மிஞ்சாது என்பதால் மிகப்பெரிய தூரத்தை அசால்டாக தாவிக்குதித்து ஓடும் மானின் வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது.
லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் நம்மகளுக்கு தான். ஒவ்வொருவரிடமும் இருக்கும் மன தைரியத்தை ஊக்குவித்து, அவர்களின் திறமையை அங்கீகரிப்பதற்காகவும் இப்படியான விளையாட்டுகள் வைத்து பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காட்டில் அப்படி எல்லாம் இல்லை. உசுரு பொழைக்கணும்னா நாள்தோறும் ஓடித் தான் ஆகணும். ஏனென்றால் அங்கிருக்கும் விலங்குகள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து தான் இருக்கின்றன. புலி பசிக்காக எல்லா நேரமும் புல்லை எல்லாம் தின்று கொண்டிருக்காது. நா சுவைக்காக அல்லாமல் உயிர் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் அது வேட்டையாடியே ஆக வேண்டும். அதனுடைய எளிதான இலக்கு எதுவென்றால் மான் தான். அங்கும் இங்கும் தேடிப்பார்க்கும் புலி, உடனடியாக மான் கூட்டத்தை நோக்கி ஓடி அந்த கூட்டத்தில் இருக்கும் ஒன்றை உணவாக பிடித்து வந்துவிடும்.
மேலும் படிக்க | பரவச உலகில் இருந்தவரின் பேன்டில் புகுவதற்குபோன நாகப்பாம்பு: வைரல் வீடியோ
ஏனென்றால் மான் தான் அளவுக்கு அதிகமான கூட்டமாக மேய்ச்சல் எடுத்துக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சென்றால் குறி எல்லாம் வைக்க தேவையில்லை. கூட்டத்துக்குள் புகுந்து ஒரு அலசு அலசி விரட்டினால் ஏதாவது ஒரு மான் சிக்கிவிடும். அதுபோதும் புலிக்கு அன்றைய நாள் உணவுக்கு. நேர் எதிராக யோசித்து பாருங்கள், மானின் நிலமையை. புலி உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து நாள்தோறும் தப்பிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் சாவின் விளிம்பில் இருந்தே வாழ்வின் அடுத்த நொடிகளை கடத்திக் கொண்டிருக்கும்.
சிங்கம், புலி, ஓநாய், செந்நாய் என பல வல்லூறுகள் உயிரை எடுக்க வட்டமடித்துக் கொண்டிருக்கையில், அவற்றிடம் இருந்து தப்பிக்க அசாத்தியமான திறமைகளை இயல்பாகவே கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் மானிடம் இருக்கிறது. ஓடினாலும், மரம் ஏறினாலும் நீந்தினாலும்கூட தப்பிப்பதற்கு அதனிடம் வழி இல்லை. ஏனென்றால் புலி சிறுத்தை உள்ளிட்டவை எல்லாம் இதை அனைத்தையும் செய்யும். போதாக்குறைக்கு நீரில் முதலை வேறு இருக்கும். அவற்றிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும். பலி கிடாவாக வாழும் மான், இந்த அனைத்து சூழல்களிலும் கிடைக்கும் சிறிய சந்தர்ப்பத்தையும் தனக்கானதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அது உயிர் வாழ முடியும். அப்படி செய்தால் கூட எல்லா சந்தர்ப்பங்களும் கை கொடுக்குமா? என்றெல்லாம் கூற முடியாது. இருக்கும் வரை அப்படி இப்படி செய்து வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டியது தான்.
இப்படியான வாழ்க்கையை கொண்டிருக்கும் மான், மிகப்பெரிய தூரம் குதிப்பது எல்லாம் பெரிய விஷயமில்லை. ஏனென்றால் அதனை தினம்தோறும் அதை செய்து கொண்டு தான் இருக்கிறது. புதிதாக பார்க்கும் நமக்கு வேண்டும் என்றால் அதிசயமாக தெரியலாம். அதற்கு அப்படி இல்லை என்று சொல்லும் தருணத்தில் தான் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் மான் ஒன்று மிக நீண்ட தூரம் ஹை ஜம்ப் செய்கிறது.
பார்க்கும் அனைவரையும் வியப்பின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த ஜம்ப்-ஐ பார்க்கும்போது, ஏலே நீ மட்டும் ஒலிம்பிக்ல கலந்துகிட்ட நிச்சயமாக தங்கப்பதக்கம் உனக்கு தாம்ல என்று சொல்லுமளவிற்கு அசாத்தியமாக இருக்கிறது. @TheFigen_ என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இதுவரை சுமார் 1.65 லட்சம் பார்வைகளைப் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் 2.5 மீட்டர் உயரத்தில் சுமார் 9 மீட்டர் தொலைவை அந்த மான் கடந்திருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ