நான் பார்த்ததிலேயே ’வடசென்னை’ தான் ஒரிஜனலான கேங்ஸ்டர் படம் என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், ராதாரவி, தீனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்த 17-ம் தேதி உலகம் முழுக்க வெளியானது. இந்த படம் வெளியான முதல் சிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களிடமும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. 


இந்நிலையில் தற்போது 'வடசென்னை' படத்தை பார்த்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


நான் பார்த்ததிலேயே ’வடசென்னை’ தான் ஒரிஜனலான கேங்ஸ்டர் படம். வெற்றிமாறன் அற்புதமான இயக்குனர்களில் ஒருவர். 


 



 


ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, தனுஷ் மட்டுமின்றி செந்தில், ராஜன், பத்மா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளனர். தனுஷுக்கு ஆதரவாக தனது தந்தையை எதிர்க்கும் காட்சியில் பத்மாவின் தம்பியாக நடித்த நடிகர் சிறப்பாக நடித்துள்ளார். பேச நிறைய உள்ளது.


 



 


மேலும் படத்தின் முழு 3.5 மணி நேர விடியோவை படக்குழு நெட்பிலிக்ஸில் வெளியிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.