'ஹிப்ஹாப்' ஆதி நடிப்பில் உருவாகி வரும் நான் சிரித்தால் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தூம் தூம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் 'ஹிப்ஹாப்' ஆதி. இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இத்திரைப்படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'நான் சிரித்தால்'. 


இந்த திரைப்படத்தை இயக்குநர் ராணா இயக்க, 'தமிழ்ப்படம் - 2' பட புகழ் ஐஸ்வர்யா மேனன், ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 'அவ்னி புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் சார்பில், சுந்தர்.சி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங்கும் டப்பிங் பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.



இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தூம் தூம் என்னும் பாடலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. தூம் தூம் என துவங்கும் இப்பாடலை ஹிப்ஹாப் ஆதியே எழுதி பாடி இசையமைத்திருக்கிறார். இவருடன் அனிலா ராஜீவ் இணைந்து பாடியுள்ளார்.


முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'எனக்கு பிரேக் அப்.. அதுல என் தப்பு' எனத் தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இப்பாடலினையும் ஹிப்ஹாப் ஆதியே எழுதி பாடி இசையமைத்திருக்கிறார். 


முன்னதாக இவர் நடிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு' படத்தில் இடம்பெற்றிருந்த 'வாடி புள்ள வாடி' என்னும் பிரேக்-அப் பாடல் மஹா ஹிட் அடித்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள காதல் தொடர்பான மற்றொரு பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.