தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு, அதிகாரபூர்வமாக தனது காதலை வெளிப்படுத்திய ஹரிஷ் கல்யாண்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan). தமிழ் பிக்பாஸ் (BIG BOSS) நிகழ்ச்சிக்கு பின்னர், இவரின் ‘பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், “தாராள பிரபு” போன்ற படங்கள் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றது. குறிப்பாக சொல்லப்போனால் இவருக்கு பெண் ரசிகர்கள் அதிக அளவில் உருவானார்கள். இந்நிலையில், இவர் தற்போது நடிகை பிரியா பவானி சங்கரை (Priya Bhavani Shankar) காதலிப்பது போல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 



இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து பிரியா பவானி சங்கர் செய்துள்ள ஒரு ட்விட்டர் பதிவில், ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல... நான் தான் முதலில் சொல்ல நினைத்தேன் என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ஹரிஷ் கல்யாண், காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு நான் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.


ALSO READ | இந்த 3 பேரைத் தவிர தமிழில் அனைத்து பிரபலமான ஹீரோக்களுக்காகவும் SPB பாடியுள்ளார்?


இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூற தொடங்கியுள்ளனர். மற்றொருபுறம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படத்தின் ப்ரோமோஷன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். எது எப்படியோ இன்று மாலை 5 மணிக்கு, அவர்கள் காதலிக்கிறார்களா அல்லது படத்தின் ப்ரொமோஷனுக்காக இப்படி செய்தார்களா என்பது தெரியவரும். 


 இந்த ட்விட்டர் பதிவை பார்க்கும் நெட்டிசன்கள் ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் இருவரும் தங்களது காதலை வெளி உலகுக்கு அறிவித்துவிட்டார்களா? என்னடா நடக்குது இங்க என்று கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருப்பதைப் போல ப்ரியா பவானி சங்கருக்கும் ஆண் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.