கமல் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றி பெற வாழ்த்துக்கள் -பாரதிராஜா
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். கமல் நீங்கள் செய்ய முடியும் என கமல் ஹாசனுக்கு வாழ்த்து கடிதம் எழுதிய இயக்குனர் பாரதிராஜா.
நேற்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். கலாம் வீட்டில் காலை உணவு அருந்திய கமல், அங்கிருந்து புறப்பட்டு மீனவர்களை சந்தித்தார்.
மாலை 6 மணிக்கு மதுரையில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பங்கேற்றார். இந்த பொதுகூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கலந்துகொண்டார். மதுரையில் நடைபெறும் பொதுகூட்டத்தில் தனது கட்சி கொடியை ஏற்றிய கமல்ஹாசன். பின்னர் கட்சியின் பெயர் "மக்கள் நீதி மய்யம்" என அறிவித்தார். அவருக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா அவர்கள் புதிய கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.