மனிதர்களைப்போலவே விலங்குகளிடமும் குறும்புத் தனங்களும், விளையாட்டு குணமும் இருக்கிறது. அதனை பொதுவாக நாம் பார்ப்பதில்லை. இல்லையென்றால், நாம் இருக்கும்போது விலங்குகள் அதனை வெளிக்காட்டுவதில்லை. கேமராவின் வருகைக்குப் பிறகு விலங்குகளின் சுட்டித் தனங்களையை அதிகமாக நம்மால் பார்க்க முடிகிறது. ஸ்மார்ட்போன் யுகத்தில் உலகின் ஏதோ ஒருமூலையில் விலங்கு செய்யும் குறும்புத் தனங்கள், நொடிப்பொழுதில் வீட்டில் இருந்தவாறே நம்மிடம் இருக்கும் கையடக்கக் கருவிக்குள் பார்த்துக் கொள்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!


அப்படியான வீடியோ ஒன்று டிவிட்டர் வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. AmazingNature என்ற பக்கத்தில் இருக்கும் வீடியோவில் ஏரி ஒன்றில் இருக்கும் வாத்துகள் செய்யும் சேட்டை அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், தண்ணீரில் நீந்திச் செல்லும் வாத்து ஒன்று தலையை மடக்கி, போக்கு காட்டுகிறது. நீங்கள் பார்த்தால் இது என்ன? புதுமையான ஸ்டைலில் வாத்து தலையை மடக்கி வைக்கிறது என நினைப்பீர்கள்.



பின்னர் தண்ணீருக்குள் மூழ்கி எழும் வாத்துடன், இன்னொரு வாத்தும் சேர்ந்து கொள்கிறது. மகிழ்ச்சியான எண்ண ஓட்டத்தில் இருக்கும் இரண்டு வாத்துகளும் ஜோடி சேர்ந்து அழகான நடனத்தை அரங்கேற்றுகின்றன. தண்ணீரில் மிந்தது கொண்டு, கழுத்துகளை மடக்கியவாறு நீர்மேல் குதித்து குதித்து செய்யும் சேட்டை காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. '


ALSO READ | Viral Video; பாம்பு என்றால் படையே நடுங்கும்; ஆனால், ‘இவர்’ நடுங்கவில்லையே..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR