பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!

பானிபூரியில் ஐஸ்க்ரீம் சேர்த்து செய்த புதுமையான உணவு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2022, 11:37 AM IST
  • ரோட்டுக்கடையில் கிடைக்கும் பானி பூரிக்கு தான் அதிக ருசி இருக்கும்.
  • பானி பூரிகளை வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர்.
பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ! title=

குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பானிபூரி என்றால் அலாதி பிரியம், பலரும் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிலும் ஹோட்டல்களில் கிடைக்கும் பானி பூரியை (Pani pori) விட, ரோட்டுக்கடையில் கிடைக்கும் பானி பூரிக்கு தான் அதிக ருசி இருக்கும். அதிலும் வெங்காயம், மிக்ச்சர் போன்ற டாப்பிங்க்ஸை சேர்த்து சுட சுட சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.  தற்போது விதவிதமாக கிடைக்கும் பானி பூரிகளை  வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். 

ALSO READ | Viral Video: 'அட நான் தானா அது'; குட்டி குரங்கின் க்யூட் ரியாக்‌ஷன்!

இவற்றை அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப பானி பூரி, பட்டாச்சே, புக்சா என ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் பானிபூரிக்கு பெயர் உள்ளது.  இப்போதெல்லாம் இணையத்தில் அதிகமாக விதவிதமான உணவு வீடியோக்கள் மக்களை கவர்கிறது.  அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வினோதமான உணவு வகைகளின் பல வீடியோக்கள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளது.

panipori

அவை பார்ப்பவர்களுக்கு மிகவும் மோசமான அனுபவத்தை தரக்கூடியதாக இருந்தது என்றும் கூறலாம். மோமோஸ், தோசை மற்றும் டோக்லாஸ் போன்றவைகளில் ஐஸ்கிரீம் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.  மசாலா தோசையுடன் ஐஸ்க்ரீம் சேர்த்து அந்த உணவுடன் சட்னி சேர்த்து பரிமாறிய வீடியோக்கள் பலரையும் சலிப்படைய செய்தது.  அதுபோன்ற மற்றொரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது, இது பானி பூரி பிரியர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

 

thegreatindianfoodie என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், கடை உரிமையாளர் ஒருவர் பானிபூரியுடன் ஐஸ்கிரீம் தயாரிப்பதை பார்க்கலாம்.  ஒரு பூரியை எடுத்துக்கொண்டவர் அதனுள் ஆலு, சோலே போன்றவற்றை வைத்து அதனுள் பானி தண்ணியை ஊற்றி, அதில் சிறிது கிரீம் சேர்த்து, ஐஸ்கிரீம் ரோல்ஸ் செய்கிறார்.  பின்னர் அந்த ஐஸ்க்ரீம் ரோல்ஸை எடுத்து அதன் மீது சட்னி ஊற்றி பரிமாறுகிறார். இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே இணையத்தில் வைரலாக பரவி  கிட்டத்தட்ட 151,000 பார்வைகளை கடந்து இருக்கிறது.  இந்த வீடியோ கலவையான பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ALSO READ | சுவையான மசாலா ஐஸ்க்ரீம் தோசை யாருக்கு வேணும்! வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News