Facebook மற்றும் Twitterக்கு சவால் விடும் MeWe பற்றித் தெரியுமா?
MeWe சமூக வலைதளம் ஏற்கனவே இருந்தாலும், அதை மிகவும் பிரபலமாக்கியது டிரம்பின் ஆதரவாளர்கள் என்றே சொல்லலாம். பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மீது கொண்ட கோபத்தால் அவற்றைத் தவிர்ப்பதற்காக ட்ரம்ப் ஆதரவாளர்கள் புதிய தளங்களைத் தேடுவதால், MeWeக்கு அடித்தது ஜாக்பாட்.
MeWe சமூக வலைதளம் ஏற்கனவே இருந்தாலும், அதை மிகவும் பிரபலமாக்கியது டிரம்பின் ஆதரவாளர்கள் என்றே சொல்லலாம். பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மீது கொண்ட கோபத்தால் அவற்றைத் தவிர்ப்பதற்காக ட்ரம்ப் ஆதரவாளர்கள் புதிய தளங்களைத் தேடுவதால், MeWeக்கு அடித்தது ஜாக்பாட்.
புதிதாக பலர் பயன்படுத்துவதால் தற்போது ராக்கெட் வேகத்தில் வளர்ந்துவரும் MeWe, “next-gen social network” என்று கூறுகிறது.அதுமட்டுமல்ல, தரவு தனியுரிமையின் அடிப்படையில் புதிய பயனர்களுக்கு அதன் விற்பனை உத்தியை அழகாக அறிமுகப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, விளம்பரமில்லாத, தொல்லைகளற்ற சமூக ஊடக அனுபவத்தை வழங்குகிறது.
MeWe என்பது Sgrouples எனப்படும் ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது, Sgrouples என்பதே முதலில் இந்த சமூக வலைதளத்தின் பெயராகவும் இருந்தது. இதை இணைய தொழில்முனைவோர் மார்க் வெய்ன்ஸ்டீன் (Mark Weinstein) நிறுவினார். கடந்த ஆண்டு ரோலிங் ஸ்டோன் (Rolling Stone) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வெய்ன்ஸ்டீன் தன்னை "சமூக ஊடகங்களை கண்டுபிடித்தவர்களில் ஒருவர்" என்று குறிப்பிட்டார்.
அது சற்று ஓவர் தான். என்ன செய்வது அதீத தன்னம்பிக்கையா? MeWe பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றிற்கு கடும் சவாலாக இருக்குமா என்பதைப் பொருத்து அது தெரியவரும். 1998 ஆம் ஆண்டில், சூப்பர் குரூப்ஸ் (SuperGroups) என்று அழைக்கப்படும் வலைதளத்தை அவர் உருவாக்கினார், இது 2001 ஆம் ஆண்டில் அதன் முதலீட்டாளர்களால் மூடப்பட்டது.
2011 ஆம் ஆண்டில், வெய்ன்ஸ்டீன் ஒரு புதிய ஆன்லைன் வணிக முயற்சியைத் தொடங்கினார், இதன் விளைவாக MeWe உருவாக்கப்பட்டது.
MeWe ஐ யார் பயன்படுத்துகிறார்கள்?
கிட்டத்தட்ட எல்லோரும் MeWe ஐப் பயன்படுத்துகிறார்கள்…
MeWe இல் பல முக்கிய செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆளுமைகளுக்கான கணக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் MeWeயின் பயனர்.
உண்மையில் டிரம்பின் கணக்கு அல்ல. அவரோ அவரது குழுவோ கணக்கை அமைக்கவில்லை. MeWe வலைதளமே கணக்கை உருவாக்குகிறது. MeWeஇன் உண்மையான பயனர்கள் அந்தக் கணக்கைப் பின்தொடரலாம். இது ட்ரம்ப், தனது டிவிட்டர் கணக்கில் ட்வீட்களை, போடும்போதே MeWeயிலும் காணிபித்துவிடும்.
நியூயார்க் டைம்ஸ், என்.எப்.எல், ஃபாக்ஸ் நியூஸ், ஹஃப் போஸ்ட், ஏன் வெங்காயம் (New York Times, the NFL, Fox News, HuffPost) என பல அதிகாரப்பூர்வமற்ற MeWe கணக்குகள் உள்ளன. வெங்காயத்திற்குக் (Onion) கூட கணக்கு இருக்கிறது தெரியுமா?
ஒருபுறம், அவ்வப்போது வந்து MeWeஐ பார்வையிடுபவர்கள் இந்த சமூக வலைப்பின்னலில் ஒரு கணக்கை உருவாக்க முடியாது. மறுபுறம், வெவ்வேறு தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை நிரப்புவதால் MeWeக்கு நல்ல பலன் கிடைக்கும். இது MeWe தளத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR