வைரல் வீடியோ: ஒரு பால் ஆலையில் பால் நிரப்பப்பட்ட தொட்டியில் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கிறார். பாலும்-உடலுமாக இல்லையில்லை, கையும்-களவுமாக பிடிபட்டபோது என்ன நேர்ந்தது தெரியுமா? வழக்கமாக சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யும்போது பாலாபிஷேகம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பாலை ஒரு பெரிய தொட்டியில் நிரப்பி, அதில் நீச்சலடித்துக் குளிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒருவர் பால் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ துருக்கியில் உள்ள ஒரு பால்ப் பண்ணையில் எடுக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் ஒரு பணியாளர் இந்த பால் குளியலை நடத்திக் கொண்டிருந்தார்.
விஷயம் தெரிய வந்ததும், ஊழியர் கைது செய்யப்பட்டார். அந்த குறிப்பிட்ட பால் ஆலை மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு மனிதன் ஒரு பால் தொட்டியில் குளிப்பதைக் காட்டும் வீடியோவை nedenttoldu என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு பல ஆயிரம் லைக்குகள் வந்துள்ளன, 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பால்க் குளியல் வீடியோவைப் பார்த்துள்ளனர்.
Bir süt fabrikasında çekilen ve Tiktok'ta paylaşılan 'süt banyosu' videosu.
Fabrikanın 'Konya'da olduğu' iddia ediliyor. pic.twitter.com/erkXhlX0yM
— Neden TT oldu (@nedenttoldu) November 5, 2020
அதுமட்டுமா? மக்கள் சகட்டுமேனிக்கு இந்த பால் குளியல் வீடியோவைப் பற்றி தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மக்களின் நம்பிக்கையுடன் விளையாடும் இதுபோன்ற விஷயங்களைப் பார்க்கும்போது, மற்றவர்களின் மீது நம்பிக்கை போய்விடுகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் வீடியோவில் (Viral Video) ஒரு நபர் தொட்டியில் படுத்துக் கொண்டிருப்பதையும், மற்றொரு நபர் முன்னால் இருந்து வீடியோ எடுப்பதையும் தெளிவாகக் காணலாம். ஹுரியட் டெய்லி நியூஸின் (Hurriyet Daily News) அறிக்கையின்படி, மத்திய அனாதோலியன் மாகாணத்தில் உள்ள ஒரு பால்ப் பண்ணையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகிய பின்னர், பாலில் குதியாட்டம் போட்டவரும், அதை வீடியோ எடுத்தவரும் என இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பால் ஆலைக்கு அபராதம் விதிக்கப்படும்
இந்த விவகாரத்திற்குப் பிறகு, பால்ப்பண்ணை மூடப்பட்டுவிட்டது. மேலும், அலட்சியமாக இருந்த ஆலை நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, விற்பனை செய்யும் பாலில் குளித்த உகூர் துர்கட் (Ugur Turgut) வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த உகூர் துர்கட், தான் இருந்த தொட்டியில் தண்ணீர் மற்றும் துப்புரவுப் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தண்ணீரில் குளிக்கவே பஞ்சமாக இருக்கும்போது, பாலில் குளியல் நடத்தும் ஆசை வந்தது போல... ஆனால், குடிக்கும் பாலை, அதுவும் பால்ப்பண்ணையில் இருந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பாலில் இப்படி மோசடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR