வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்த்தால் அவைகள் வீட்டில் ஒருவராக மாறிவிடும். வீட்டார்களுடனே உறங்குவது, அவர்களுடன் விளையாடுவது என உணர்வு ரீதியாக நெருக்கமாகும் தன்மை உடையவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி வளர்க்கும்பட்சத்தில் அந்த பிராணிகளுக்குள் உருவாகும் நட்பு சமயங்களில் ஆச்சரியத்தையும், அலாதியையும் கொடுக்கக்கூடியவை.


மேலும் படிக்க | சீறும் சிறுத்தையின் அட்டகாசத்தை அடக்கும் அதிகாரிகள் வீடியோ வைரல்


குறிப்பாக அவைகள் நடந்துகொள்ளும் முறை மனிதர்களுக்கே பாடம் எடுக்கும் வகையில் இருக்கும். ஒன்றுக்கொன்று ஒத்தாசையாய் இருப்பது, ஒன்றாக விளையாடுவது, சேர்ந்து உறங்குவது என குறும்பாகவும், அழகாகவும் தங்களது உறவை பாதுகாத்துக்கொள்ளும். அந்தவகையில் நாயும், பூனைக்குட்டியும் நட்போடு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


அந்த வீடியோவில் பெரிய நாய் ஒன்று பூனைக்குட்டியை வாஞ்சையோடு தனது நாக்கால் தடவி கொடுக்கிறது. அதற்கு பூனைக்குட்டியும் தனது நாக்கால் நாயை தடவிக்கொடுக்கிறது.


மேலும் படிக்க | தகிக்க வைக்கும் நெருப்பாற்றின் வைரல் வீடியோ


அதேபோல் பூனைக்குட்டியும் நாய்க்கு அருகிலேயே படுப்பது, உறங்குவது, அதன் அரவணைப்பிலேயே இருப்பது என தன்னை முழுமையாக நாயிடம் ஒப்படைத்துக்கொண்டது. தற்ஒபோது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 


 



மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நாயும், பூனைக்குட்டியும் நட்புக்கு இலக்கணமாக இருக்கின்றன என கூறி அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe