சீறும் சிறுத்தையின் அட்டகாசத்தை அடக்கும் அதிகாரிகள் வீடியோ வைரல்

அடங்க மறுக்கும் சிறுத்தையை அடக்கி கூண்டில் அடக்க முயற்சிக்கும் அதிகாரிகளின் முயற்சி... வைரலாகும் சிறுத்தையின் சீற்றம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 3, 2022, 01:48 PM IST
  • சீறும் சிறுத்தையை அடக்க முடியாமல் திண்டாடும் மனிதர்கள்
  • அடங்க மறு என்று உறுமும் சிறுத்தை
  • துள்ளி குதிக்கும் சீறும் சிறுத்தை வீடியோ
சீறும் சிறுத்தையின் அட்டகாசத்தை அடக்கும் அதிகாரிகள் வீடியோ வைரல் title=

சில நொடிகள் என்றாலும் பார்த்ததுமே திகிலையும், திகைப்பையும் வியப்பையும் கொடுக்கும் விலங்குகளின் வீடியோக்களும் பயத்தை கொடுக்கின்றன. சிறுத்தை என்றாலே பயமாக இருக்கும் என்றால், அதை பிடிக்கும்போது அடங்க மறுத்து துள்ளி குதித்தால்?

பார்த்தால் பயமாக இருக்கிறது என்றால், அந்த சிறுத்தையை அடக்கும் அதிகாரிகளின் துணிச்சலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

சிறுத்தையின் இரை வேட்டை, கடுமையான தாக்குதல் வேட்டையாக இருக்கும். அது காட்டுக்குள் இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஆனால் நாட்டுக்குள் வந்தால்? மனிதர்களை அடித்துக் கொன்றுவிடும் என்பதால் வன அதிகாரிகள் அவற்றை பிடித்து மீண்டும் காட்டில் கொண்டு விடுவார்கள்.

மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்

ஆனால், சீறும் சிறுத்தையை அடக்குவது என்பது சுலபமானது அல்ல. அதிலும் காட்டில் இருக்கும் விலங்குகளை வேட்டையாடும் சிறுத்தைக்கு மனிதர்களும் இரை தானே? 

அண்மைக்காலமாக இணையதளங்களில் விலங்குகளின் வீடியோ வைரலாகிவருகிறது. அது, விலங்குகளின் சாமார்த்தியமாக இருந்தாலும் சரி, வேட்டையாடும் திறமையாக இருந்தாலும் சரி, அதிலும் கர்ஜிக்கும் விலங்கின் வீடியோக்கள் வைரலாகின்றன.  

இந்த வீடியோவில் சிறுத்தையை பிடிக்க முயலும் மனிதர்களின் முயற்சியும், அடங்க மறுக்கும் சிறுத்தையின் சீற்றமும் பதிவாகியிருக்கிறது. சில நொடிகள் என்றாலும், சிறுத்தையின் சீற்றமான குரல் நீண்ட நேரம் காதில் ஒலிக்கிறது.

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

இந்த வீடியோவை பார்த்த பிறகு, உண்மையிலேயே பயமாக இருக்கிறதா என்று பாருங்கள்...

மேலும் படிக்க | பாய்ந்து துரத்தும் சிறுத்தை: பதறியோடும் விடாது துரத்தும் சிறுத்தை

விலங்குகளின் வீடியோக்களும், வேட்டையாடும் விலங்கு வீடியோக்களும் அதிக அளவில் வைரலாகின்றன. அதில் அண்மையில் வைரலாகும் சிறுத்தையின் வீடியோ பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

அதிலும் இந்த வீடியோவில் உறுமும் சிறுத்தையை பலர் சேர்ந்து பிடித்து கூண்டில் அடைக்கும் முயற்சியில் ஈடுபடும் வீடியோ பார்க்கவே த்ரில்லிங்காக இருக்கிறது.

எதேச்சையாக வீடியோ பதிவு செய்தவர்கள், அதை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். அவை, வைரலாகி பலரின் விருப்பத்திற்குரிய வீடியோவாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க | 'ப்பா...' என வாய் பிளக்க வைக்கும் டான்ஸ்: இணையத்தை கலக்கும் பெண்ணின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News